22 ஆண்டுகளுக்கு முன்பு செய்த பாலியல் குற்றம்; மதுபோதையில் போலீஸ் உளவாளியிடம் உளறி சிக்கிய குற்றவாளி!

குடிபோதையில்தான் சிலர் உண்மையை சொல்வார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். மும்பையில் அது போன்று குடிபோதையில் ஒருவர் தான் 22 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்ததை உளறி போலீஸாரிடம் சிக்கி இருக்கிறார். மும்பை மீரா பயந்தரை சேர்ந்த 24 வயது பெண் 2002-ம் ஆண்டு தனது வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை கடத்திச்சென்று ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அப்பெண் கொடுத்த அடையாளத்தை பயன்படுத்தி ராஜு ரத்தோடு, தீரஜ் ஆகியோரை நாலாசோபாராவில் கைதுசெய்தனர். எஞ்சிய இருவர் பிடிபடவில்லை. அவர்களது பெயர் மிக்கேல் மற்றும் சங்கர் என்று மட்டும் அடையாளம் தெரிந்தது. அதன் அடிப்படையில் இருவரையும் போலீஸார் தேடி வந்தனர். அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

போலீஸ் உளவாளி மூலம் இருவர் பற்றிய தகவல்களை சேகரித்து வந்தனர். மிக்கேல் தனது பெயரை சங்கர் பாண்டே என்று மாற்றிக்கொண்டு நாலாசோபாராவில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். சங்கர் பாண்டே அங்குள்ள பீர் பார் ஒன்றில் அமர்ந்து மது அருந்தினார்.

அவருடன் போலீஸ் உளவாளி ஒருவரும் இருந்தார். குடிபோதையில் சங்கர் பாண்டே போலீஸ் உளவாளி என்று தெரியாமல் அவரிடம் 22 ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்த கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக தன்னுடன் மது அருந்திய நபரிடம் தெரிவித்தார். உடனே போலீஸ் உளவாளி இது குறித்து போலீஸில் தெரிவித்தார்.

கைது

சங்கர் பாண்டேயின் வீடு போலீஸாருக்கு தெரியாது. இதையடுத்து போலீஸார் சங்கர் பாண்டேயை கண்காணிக்க ஆரம்பித்தனர். அவர் நாலாசோபாரா ரயில் நிலையம் அருகே ஆட்டோவில் பயணியை தனது ஆட்டோவில் ஏற்ற ஆரம்பித்தார். அந்நேரம் அவரை அடையாளம் கண்டுகொண்ட போலீஸார் உடனே சங்கர் பாண்டேயை கைது செய்து செய்தனர். அவரிடம் விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.