Kerala: அரசு மருத்துவமனை லிஃப்ட்டில் 2 நாள்கள் சிக்கி தவித்த நபர்; பதறிய உறவினர்கள் - என்ன நடந்தது?

கேரளாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்குச் சென்ற 59 வயது நபர், இரண்டு நாள்கள் லிஃப்ட்டில் சிக்கிக் கொண்டு இருந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக, திருவனந்தபுரத்தின் உள்ளூர் (Ulloor) நகரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நாயர் என்பவர் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

லிஃப்ட்

அப்போது, வெளிநோயாளி வார்டு வளாகத்துக்குச் செல்லும் லிஃப்ட்டில் ஏறியவர் அதிலேயே சிக்கிக்கொண்டார். மறுபக்கம், வெகுநேரமாகியும் ரவீந்திரன் வீட்டுக்கு வராததால் அவரின் குடும்பத்தினர், அவர் காணாமல் போனதாக ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸில் புகாரளித்தனர்.

அதையடுத்து, போலீஸார் இதில் ஒருபுறம் விசாரணை மேற்கொண்டிருக்க, மருத்துவமனையின் லிஃப்ட் ஆபரேட்டர் எப்போதும் போல இன்று காலை வழக்கமான பணிக்காக லிஃப்டை இயக்கியபோது, இரண்டு நாள்களாக அதில் சிக்கியிருந்த ரவீந்திரன் ஒருவழியாக வெளியில் வந்தார்.

கேரளாவில் லிஃப்ட்டில் சிக்கிக்கொண்ட நபர்

இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், `மருத்துவமனையின் முதல் தளத்துக்குச் செல்வதற்காக அன்று அவர் லிஃப்ட்டில் ஏறினார். அப்போது கீழே வந்த லிஃப்ட், அவர் உள்ளே ஏறிய பிறகு மூடியது. ஆனால், அதன் பிறகு, லிஃப்ட்டின் கதவு திறக்கவேயில்லை. உதவிக்காக அவர் கூச்சலிட்ட போதும் யாரும் வரவில்லை என்று வெளிவந்த பிறகு தெரிவித்தார். அவரின் செல்போனும் அப்போது ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்திருக்கிறது" என்று கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.