போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் கைது; 2.6 கிலோ கொகைன் பறிமுதல்!
பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் இந்தியன் 2 உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவரது சகோதரர் அமன் பிரீத் சிங். இன்று ஐதராபாத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தி 2.6 கிலோ கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக அமன் பிரீத் சிங் உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. போதைப்பொருள் விற்பனை செய்தது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ரெய்டு நடத்தப்பட்டதில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமன் பிரீத் சிங் விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று ஐதராபாத் போலீஸார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஏற்கெனவே ரகுல் பிரீத் சிங்கிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தினர். 2021, 22-ம் ஆண்டுகளில் ரகுல் பிரீத் சிங்கிடம் அமலாக்கப் பிரிவு வாக்குமூலம் வாங்கியது. கைது செய்யப்பட்ட அமன் பிரீத் சிங்கும் படங்களில் நடித்து வருகிறார். அவர் தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார். இந்தியில் 2020-ம் ஆண்டு வெளியான ராம்ராஜ்யா படத்தில் நடித்துள்ளார். பயணத்தில் அதிக ஆர்வம் கொண்ட அமன் பிரீத் சிங், தனது சகோதரியுடன் சேர்ந்து படத்தில் நடிக்க ஆர்வம் இருப்பவர்களை கண்டுபிடித்து வாய்ப்பு கொடுக்க தனி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


