விசாரணை கைதிக்கு பாதுகாப்பு…மனு கொடுத்த மனைவி…

பகுஜன் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியை சார்ந்த மாநிலத் தலைவரின் படுகொலை தமிழத்தையே உலுக்கியது. கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அக்கட்சியின் தலைவர் மாயாவதி சென்னை வந்து சென்றார்.

தமிழகத்தின் பல்வேறு கட்சித்தலைவர்களும் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை சந்தித்து அன்மையில் தனது ஆறுதலை கூறி வந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அதோடு குற்றவாளிகள் மீதான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொல்லியுமிருந்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாக பார்க்கப்படுபவர்களிடம் தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Armstrong

Armstrong                                                                                                                                  கடந்த வாரம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றதோடு தான் மறைத்து வைத்துருந்த கைத்துப்பாக்கியால் போலீஸார் மீது துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளார். கைதியிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எதிர் தாக்குதலை காவல் துறையனர் நடத்தியுள்ளனர்.

இந்த என்கவுண்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப் பட்டார். இந்நிலையில் காவல் துறையினரின் பிடியில் விசாரணையில் இருந்து வரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவராக பார்க்கப்படும் மற்றொருவரான பொன்னை பாலுவின் மனைவி தனது கனவர் உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் கைதி என் கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக எதிர்கட்சியான அதிமுக, பாஜக ஆகியவை சந்தேகத்தை கிளப்பியுள்ள நிலையில், பொன்னை பாலுவின் மனைவி பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.

The post விசாரணை கைதிக்கு பாதுகாப்பு…மனு கொடுத்த மனைவி… first appeared on Tamilnadu Flash News.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.