கேரளா: திடீர் கனமழை... 22 ஜீப்கள் - தடை செய்யப்பட்ட மலைப் பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே தூக்குபாலம் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் நாலுமலை வியூ பாய்ண்ட் உள்ளது. கொழுக்குமலை போன்று உயரமான இந்த மலைப்பகுதியில் இருந்து ரம்மியமான சூழலில் மேகங்கள் தவழ்ந்து செல்லும் அழகையும், சூரிய உதயம், அஸ்தமனத்தையும் காணமுடியம். அதேபோல தேனி மாவட்ட பகுதிகளை பார்க்க முடியும்.
மிகவும் ஆபத்தான அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல இடுக்கி மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 40 பேர் கொண்ட குழு 22 வாகனங்களில் நாலுமலை வியூ பாயின்ட் பகுதிக்கு சென்றனர். அப்பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் மலைசாலை சேறும், சகதியுமாக இருந்தது. அதில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
இரவானதால் அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் அடிவார உள்ளூர் மக்களை அணுகி உதவி கேட்டுள்ளனர். இதையடுத்து வனத்துறை, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்ட அவர்கள் ராமக்கல் மெட்டு பகுதிக்கு கொண்டுவரப்பட்டனர். மேலும் மலையில் சிக்கிய வாகனங்களும் மீட்கப்பட்டன.

இதையடுத்து தடை செய்யப்பட்ட பகுதிக்கு சுற்றுலா பயணிகளை ஜீப்களில் அழைத்து சென்ற டிரைவர்கள் 22 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


