கொடூரத்தில் முடிந்த கணவன் - மனைவி வாக்குவாதம்... தெலங்கானா போலீஸ் கூறும் அதிர்ச்சி சம்பவம்!

தெலங்கானாவில் மனைவியின் சமீபகால நடவடிக்கைகளால் கணவன் செய்த கொடூர செயல் போலீஸாரால் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, பிரதீப் போலோ (32) என்பவர் தன்னுடைய மனைவி மதுஸ்மிதா பிரதான் மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையுடன் ஒடிசாவிலிருந்து சில மாதங்களுக்கு ஹைதராபாத்துக்கு குடியேறினார். உப்பல் பகுதியில் பாரத்நகரில் மூவரும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்துவந்தனர். கணவன் பிரதீப் அதேபகுதியில் ஹோட்டல் ஒன்றில் வேலைசெய்துவந்தார்.

கொலை

இவ்வாறிருக்க, கடந்த வாரம் பிரதீப்புக்கும், அவரின் மனைவிக்கும் இடையே இரவு சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதில் பிரதீப் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து, சப்பாத்தி கட்டையால் மனைவியின் தலையில் பலமாகத் தாக்கினார். இதனால், மனைவி மதுஸ்மிதா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, சடலத்தை ஒரு கோணிப்பையில் அடைத்துவைத்து குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியேறினார் பிரதீப். அதன்பிறகு வீட்டுக்கு வரவேயில்லை. இப்படியிருக்க, கடந்த வெள்ளிக்கிழமை அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு வந்த போலீஸார், அக்கம் பக்கத்தினரை விசாரித்து பிரதீப்பைத் தேட ஆரம்பித்தனர். ஒருவழியாக, சனிக்கிழமை இரவு பிரதீப் கைதுசெய்யப்பட்டார்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து நேற்று பேசிய உப்பல் இன்ஸ்பெக்டர் என்.எலக்ஷன் ரெட்டி, ``கொல்லப்பட்ட அந்தப் பெண் சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று, ஒடிசாவின் கேந்திரபாரா போலீஸிடம் தன் கணவர்மீது குடும்ப வன்முறை பிரிவில் புகார் அளித்தார். அதையடுத்து, குடும்பப் பெரியவர்கள் கணவன் மனைவி இருவருக்கும் அறிவுரை கூறியதையடுத்து, இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கினர். இருப்பினும், இருவருக்குள்ளும் பிரச்னைகள் மீண்டும் எழுந்தன. ஜூலை 4-ம் தேதி அன்று இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மனைவி சமைப்பதை நிறுத்த பிரதீப் வெளியில் சாப்பிடத் தொடங்கினார்.

காவல்துறை

இவ்வாறிருக்க, ஜூலை 7-ம் தேதி வேலை முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பிய பிரதீப்புக்கும், அவரின் மனைவிக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, பிரதீப் தன்னுடைய மனைவியின் கழுத்தை துணியால் நெரித்து, சப்பாத்தி கட்டையால் தலையில் தாக்க அங்கேயே அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பின்னர், பிரதீப் தனது மனைவியின் உடலை ஒரு கோணிப்பையில் அடைத்து வைத்துவிட்டுத் தப்பிவிட்டார். அதோடு, தனது மகளை செகந்திராபாத் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சோமாஜிகுடாவிலுள்ள ஒரு ஹோட்டலில் அவர் வேலை செய்யத் தொடங்கினார். தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்" என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.