Copa América: மைதானத்தில் கதறி அழுத லியோனல் மெஸ்ஸி! காரணம் என்ன?

லியோனல் மெஸ்ஸி கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி வென்றிருக்கிறது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. இந்தப் போட்டியின்போது லியோனல் மெஸ்ஸி அழுத வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

போட்டியின் 36-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பந்தை அடிக்க முயன்ற போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாகக் களத்தில் இறங்கிய மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர்.

Lionel Messi

சில நிமிடங்களுக்குப் பிறகு களத்திற்குத் திரும்பிவந்து தொடர்ந்து ஆட முயன்றார். ஆனால் அவரது காயம் இன்னும் மோசமானது. அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. அதனால் ஆடுகளத்தை விட்டு வெளியேறி விட்டார். தன்னால் போட்டியில் தொடர்ந்து ஆட முடியவில்லை, கோல் அடிக்க முடியவில்லை என்பதை எண்ணி அழுதிருக்கிறார்.

Lionel Messi

அதன் பிறகு இந்தப் போட்டியில் 112வது நிமிடத்தில் மார்டினேஸ் அர்ஜெண்டினா அணிக்காக கோல் அடித்தார். இதை அடுத்து 1 - 0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா, கொலம்பியாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியிருக்கிறது. இந்தத் தொடரை 16-வது முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது அர்ஜெண்டினா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.