Samuthirakani: தி.மலையில் நடிகர் சமுத்திரக்கனி நிலத்தில் திருட்டு; பெண் உட்பட 4 பேர் சிறையிலடைப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு அருகேயுள்ள ஊர்க்கவுண்டனூர் கிராமத்தில், திரைப்பட இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனிக்குச் சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட வேளாண்மை நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில், உள்ளூரைச் சேர்ந்த விவசாயி ராமு என்பவர் பயிர் செய்து பராமரித்துவருகிறார். ரூ.2 லட்சம் மதிப்பிலான `பவர் டில்லர்’ உழவு இயந்திரத்தையும் சமுத்திரக்கனி வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பவர் டில்லர் இயந்திரம் திருடுபோனது.
இது குறித்து, செங்கம் காவல் நிலையத்தில் விவசாயி ராமு புகாரளித்தார். வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த அருள், விஜயா என்ற பெண் மற்றும் மங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், செல்வகுமார் ஆகியோர்தான் திருட்டில் ஈடுபட்டிருக்கின்றனர் எனத் தெரியவந்தது. 4 பேரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடம் இருந்து பவர் டில்லர் இயந்திரத்தையும் மீட்டனர். கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் சிறையிலடைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


