``கடன்களுக்கு வட்டி விகிதம் உயர்வு.. SBI அறிவிப்பால் யாருக்கு பாதிப்பு..?
எஸ்.பி.ஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதமான எம்.சி.எல்.ஆர் விகிதத்தை (MCLR) 0.05 சதவிகிதம் முதல் 0.10 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது. எம்.சி.எல்.ஆர் வட்டி விகித உயர்வு ஜூலை 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.
எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால், அதனுடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரும். இதன் விளைவாக, கடன்களுக்கான இ.எம்.ஐ தொகையும் அதிகரிக்கும்.
புதிய எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதங்கள்:
ஓவர்நைட் : 8.10%
1 மாதம் : 8.35%
3 மாதம் : 8.40%
6 மாதம் : 8.75%
1 ஆண்டு : 8.85%
2 ஆண்டு : 8.95%
3 ஆண்டு : 9%
இதற்கு முன் கடந்த ஜூன் மாதத்தில் எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதங்களை எஸ்.பி.ஐ வங்கி உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், எம்.சி.எல்.ஆர் வட்டி உயர்வால் பெரும்பாலும் கார்ப்பரேட் கடன்களுக்கான வட்டி விகிதமே உயரும். எனவே, வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற சிறு கடன்களை வாங்கியவர்களுக்கு பாதிப்பில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


