`சர்ச்சை’ பெண் ஐ.ஏ.எஸ் பூஜாவின் பெற்றோர் தலைமறைவு - தேடும் தனிப்படை போலீஸ்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய பூஜா கேட்கருக்கு புனே மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தனி அலுவலகம், தனி கார் உட்பட பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்கும்படி பூஜா-வின் தந்தை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நெருக்கடி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்புகாரால் வாசிம் மாவட்டத்திற்கு பூஜா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதோடு பூஜாவின் தாயார் மனோரமா நிலப்பிரச்னையில் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸார் வழக்கு பதிவு செய்தவுடன் பூஜாவின் பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் இருவரும் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அவர்களது போன் ஆப் செய்யப்பட்டுள்ளது.

பூஜா

இது குறித்து புனே ரூரல் பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் பங்கஜ் தேஷ்முக் கூறுகையில், பூஜாவின் பெற்றோரை தேடி வருகிறோம். அவர்களை தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். ஆனால் முடியவில்லை. அவர்களது வீட்டிற்கு சென்றோம். அங்கு கிடைக்கவில்லை. அவர்களது போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. பண்ணை வீடுகளில் தேடி வருகிறோம். அவர்களை தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறோம். அவர்களை தேடி கண்டுபிடிக்கும்போது விவசாயியை துப்பாக்கியை காட்டி மிரட்டியது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்றார்.

விவசாயியை மிரட்டியது தொடர்பாக மனோரமா மற்றும் அவரது கணவர் திலிப் உட்பட 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். பாதுகாப்புக்காகத்தான் துப்பாக்கி எடுத்துச்சென்றதாகவும், துப்பாக்கிக்கு முறைப்படி லைசென்ஸ் பெற்று இருப்பதாகவும் பூஜாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பூஜா கடந்த 2022ம் ஆண்டு பார்வைக்குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி என்று கூறி சான்றிதழுக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பூஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுக்க முடியாது என்று நிராகரித்து கடிதம் அனுப்பி இருப்பது தெரிய வந்துள்ளது. அக்கடிதம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இதற்கு முன்பு அகமத் நகரிலும் இது போன்ற ஒரு சான்றிதழ் பெற பூஜா முயற்சி மேற்கொண்டார். அங்கேயும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் கிடைக்கவில்லை. யு.பி.எஸ்.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாற்றுத்திறனாளி என்ற சலுகையை பயன்படுத்தி பூஜா வேலையில் சேர்ந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.