இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் தற்கொலைகள் - டேட்டா சொல்லும் அதிர்ச்சி செய்தி என்ன?!

கடந்த ஏப்ரலில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை விகிதம் 1,00,000-க்கு 12.4 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச தற்கொலை விகிதம் ஆகும். இவ்வாறு உலகத்திலேயே இந்தியாவில் தான் தற்கொலைகள் அதிகம் நடப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்

இதுகுறித்து பேசும் மனநல நிபுணர்கள், "தற்கொலைக்கு மிகவும் பொதுவான அடிப்படைக் காரணம் மனச்சோர்வு ஆகும். இது சாதாரண மக்களின் மொழியில் மன அழுத்தம் என்று சொல்கிறோம். இல்லையெனில் அது மனக்கிளர்ச்சி அல்லது பிற காரணிகளால் இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவை மனச்சோர்வின் காரணமாகவே நடக்கிறது. மேலும் இதற்கு வாழ்க்கையில் ஏற்படும் வேலை அழுத்தங்கள், நிதி, உறவுப் பிரச்னைகள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகள் மன அழுத்தத்தை உருவாக்குகிறது.

அப்போது மன அழுத்தம் தீவிரமடைந்து கவலை மற்றும் மனச்சோர்வாக மாறும். இது தற்கொலைக்கு வழிவகுக்கும். தற்கொலையால் இறக்கும் நபர்களில் 50 முதல் 90 சதவீதம் பேர் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் இருமுனைக் கோளாறு போன்ற மன நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இன்று, தற்கொலை என்பது இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொது சுகாதார நெருக்கடியாகும். இது இளைஞர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாகும். தீவிர மன அழுத்தத்தின் போது தற்கொலைகள் மனக்கிளர்ச்சியுடன் நிகழலாம்.

தற்கொலை (Representational Image)

மேலும் பாதிக்கப்படக் கூடியவர்கள் நிதி சிக்கல்கள், மருத்துவம் போன்ற அழுத்தங்களை சமாளிக்க முடியாமல் போராடலாம். இதேபோல தனிமை மற்றும் தனிமைப்படுத்துதலும் முக்கிய காரணம். இந்தியாவில் அதிகரித்து வரும் தற்கொலைப் போக்கு மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, களங்கம் மற்றும் பயம் காரணமாக தற்கொலை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் அமைதியான தொனியில்தான் நிகழ்கின்றன. இது அபாயத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. எனவே யாராவது மனச்சோர்வு அடைந்து இருப்பதை கவனித்தால் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், "உலகத்திலேயே சமூக பொருளாதார நெருக்கடி இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறது. 70 ஆண்டுகளில் இதுபோல் நெருக்கடி ஏற்பட்டதில்லை. இந்தியாவில் இருக்கும் முக்கிய பணக்காரர்கள் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அபகரித்து வைத்துள்ளனர். இதனால் பணம் வைத்திருப்பவர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள்.

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்

லஞ்ச, லாவண்யம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கிறது. உயர்கல்வியில் சரியான பாடங்களை தேர்வு செய்ய முடியவில்லை. விவசாயிகளுக்கும் அதீத நெருக்கடி இருக்கிறது. உலகிலேயே அதிகமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு இந்தியாதான். இதேபோல் ஆண்டுதோறும் 6 கோடி பேர் மருத்துவ செலவுக்கு செலவு செய்தே வறுமை கோட்டுக்கு கீழ் சென்று விடுகிறார்கள். இதனால்தான் தற்கொலை அதிகமாக நடக்கிறது. எனவே பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். அடித்தட்டு மக்களிடன் வாழ்க்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.