ICC Champions Trophy 2025: ஒருவேளை பாகிஸ்தானில் விளையாட மறுத்து, இந்தியா வெளியேறினால் என்ன நடக்கும்?

2025-ம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

இதற்கான அட்டவணையை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி. இந்நிலையில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தாமல், இலங்கை, துபாயில் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

India vs Pakistan

2023-ல் ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. அப்போதும் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதற்குத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்திருந்தது. இந்திய அணியின் போட்டிகள் இலங்கையில் மட்டுமே நடந்தன. கடைசியாக இந்திய அணி 2008-ல் பாகிஸ்தானிற்குச் சென்றிருந்தது. அதன் பிறகு எந்த ஒரு போட்டிக்காகவும் அங்கே செல்லவில்லை.

ஒருவேளை பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுங்கள் என்று இந்தியாவுக்கு ஐசிசி அறிவுறுத்தி, பாதுகாப்பு காரணமாக இந்திய அரசு பாகிஸ்தான் செல்ல மறுத்தால் பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணியை ஐசிசி விளையாட வைக்க முடியாது.

அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் இந்தியா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை புறக்கணித்து வெளியேற வேண்டும். இந்திய அணி பங்கேற்கவில்லை என்றால் அவர்களுக்குப் பதில் இலங்கை அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடத் தகுதி பெறும். காரணம் ஐசிசி விதிமுறைப்படி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் முதல் அணியாக விளையாடத் தகுதி பெறும்.

ICC

அதைத் தொடர்ந்து 2023 உலகக்கோப்பையில் டாப் 7 இடங்களைப் பிடித்த அணிகள் விளையாடுவதற்குத் தகுதி பெறும். அந்த விதிமுறையின்படி 2023 உலகக்கோப்பையில் இலங்கை அணி 9வது இடத்தைப் பிடித்தது. எனவே இந்தியா வெளியேறினால் அந்த இடத்திற்கு இலங்கை தகுதிபெற்று 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.