What to watch on Theatre and OTT: Indian 2, Teenz, Sarfira, Longlegs - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Indian 2 (தமிழ்)

Indian 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள `இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் தமிழ்நாட்டிலிருக்கும் ஊழல் குறித்துப் பேசிய நிலையில், இரண்டாம் பாகம் இந்திய அளவில் இருக்கும் பிற மாநிலங்களின் அரசியல் பிரச்னைகளையும் மையப்படுத்ததி எடுக்கப்பட்டிருக்கிறது.

Teenz (தமிழ்)

Teenz

பார்த்திபன் இயக்கத்தில் கிருத்திகா, ஜான் பாஸ்கோ, உதய்பிரியன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Teenz. விளையாட்டாக மர்மங்கள் நிறைந்த காட்டிற்குள் மாட்டிக் கொள்ளும் குழந்தைகள் பற்றிய திரில்லர் திரைப்படமான இது ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Sarfira (இந்தி)

Sarfira

சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. ராதிகா மதன், சீமா பிஸ்வாஸ், சரத்குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Longlegs (ஆங்கிலம்)

Longlegs

ஓஸ் பெர்கின்ஸ் இயக்கத்தில் மைக்கா மொன்ரோ, நிக்கோலஸ், காஜ், அலிசியா விட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Longlegs. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Fly Me to the Moon (ஆங்கிலம்)

Fly Me to the Moon

கிரக் பெர்லான்டி இயக்கத்தில் ஸ்கேர்லெட் ஜோஹன்ஸன், சன்னிங் டாடம், வுட்டி ஹர்ரெல்சன், ஜிம் ராஷ், ரேய் ரோமனோ உள்ளிட்டோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் Fly Me to the Moon. காமெடி சயின்ஸ் டிராமா திரைப்படமான இது ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Wild Wild Punjab (இந்தி) - Netflix

Wild Wild Punjab

சிமர்பிரீத் சிங் இயக்கத்தில் பத்ரலேகா பால், சன்னி சிங், சுபா ராஜ்புத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Wild Wild Punjab. காமெடி, ரொமான்ஸ் திரைப்படமான இது Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Kakuda (இந்தி) - Zee5

Kakuda (இந்தி)

ஆதித்யா சர்போத்தர் இயக்கத்தில் ரித்தேஷ்.டி, சோனாக்ஷி சின்ஹா, சாகிப்.எஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் Kakuda. காமெடிகள் நிறைந்த ஹாரர் திரில்லர் படமான இது Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Tyler Perrys Divorce in the Black (English) - Amazon Prime Video

Tyler Perrys Divorce in the Black

டைலர் பெர்ரி இயக்கத்தில் மீகன் குட், கோரி ஹார்ட்ரிக்ட், ஜோசப் லீ ஆண்டர்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Tyler Perrys Divorce in the Black. திருமணம் செய்து கொண்ட தன் இணையால் பல மனச்சிக்கல்கள் ஏற்பட அவரை விவாகரத்து செய்ய அவரிடமே இருவருக்குமான சிக்கல்கள் குறித்து உரையாடுகிறார் கதாநாயகி. விவாகரத்து பற்றிய இவர்களது உரையாடலின் போக்கு எப்படியிருந்தது, அப்பெண்ணிற்குச் சரியான வாழ்க்கைத் துணை அமைந்ததா என்பதுதான் இதன் கதைக்களம். உறவுச் சிக்கல்களைப் பற்றிப் பேசும் இத்திரைப்படம் Amazon Prime Video ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்

Commander Karan Saxena (இந்தி) - Disney + Hotstar

Commander Karan Saxena

ஜதின் சதீஷ் வாக்லே இயக்கத்தில் அனுபம் கே. சின்ஹா, அர்ஷ் அனேஜா, இக்பால் கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் Commander Karan Saxena. ஆக்ஷன் திரில்லர் வெப்சீரிஸான இது Disney + Hotstar ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Pill (இந்தி) - JioCinema

Pill

ராஜ் குமார் குப்தா, மஹிம் ஜோஷி ஆகியோரது இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், விக்ரம் தாரியா, ஹனிஷ் கௌஷல், பவன் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் Pill. மருத்துவத்துறை மற்றும் மருத்தகத் துறையைச் சுற்றி நடக்கும் ஊழல்களைப் பற்றி பேசும் இந்த வெப்சீரிஸ் Jio Cinema ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Showtime Season 1 Part 2 (இந்தி) - Disney+ Hotstar

Showtime Season 1 Part 2

நசிருதீன் ஷா, மஹிமா மக்வானா, இம்ரான் ஹாஷ்மி, மௌனி ராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் Showtime Season 1 Part 2. அப்பாவின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை மீண்டும் பிரபலமாக்கப் போராடும் மகனின் வாழ்க்கையில் என்னவெல்லாம் பிரச்னைகள் வந்தது என்பதுதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் Disney+ Hotstar ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Pariah (இந்தி) - Hoichoi

Pariah

விக்ரம் சாட்டர்ஜி, அங்கனா ராய், ஸ்ரீலேகா மித்ரா, அம்பரீஷ் பட்டாச்சார்யா, சௌமியா முகர்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் Pariah. ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர் வெப்சீரிஸான இது Hoichoi எனும் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

36 Days (இந்தி) - SonyLiv

36 Days

விஷால் ஃப்யூரியா இயக்கத்தில் நேஹா ஷர்மா, அம்ருதா கான்வில்கர், சுஷாந்த் திவ்கிகர், ஸ்ருதி சேத், புரப் கோஹ்லி, ஷரிப் ஹாஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் 36 Days. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது SonyLiv ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Blame the Game (ஆங்கிலம்) - Netflix

Blame the Game

மார்கோ பெட்ரி இயக்கத்தில் டென்னிஸ் மோஜென், ஜானினா உஹ்சே மற்றும் அன்னா மரியா முஹே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் Blame the Game. காதல், காமெடிகள் நிறைந்த இந்த வெப்சீரிஸ் Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Me (ஆங்கிலம்) - Apple TV+

Me

லூசியன்-ரிவர் சௌஹான், அபிகாயில் ப்னியோவ்ஸ்கி , தில்ஷாத் வத்ஸாரியா, அமண்டா ரீட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ். பள்ளி படிக்கும் சிறுவனுக்குத் திடீரென சயின்ஸ் மாயாஜால வித்தைகள் தெரிய வருகின்றன. அது அவன் வாழ்வை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதுதான் இதன் கதைக்களம். சயின்ஸ் பிக்ஷன் வெப்சீரிஸான இது Apple TV+ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

SUNNY (ஆங்கிலம்) - Apple TV+

SUNNY

கணவர், குழந்தையுடன் சந்தோஷமாக ஜப்பானில் வாழும் அமெரிக்கப் பெண்ணின் வாழ்க்கை திடீரென நடந்த ஒரு விமான விபத்தில் தலைகீழாக மாறிவிடுகிறது. கணவர், குழந்தைகளை இழந்து விடுகிறார். தனியாக வாழும் நிலைமைக்குத் தள்ளப்பட்ட அவரின் வாழ்க்கைக்குத் துணையாக ஒரு AI ரோபோட் வருகிறது. அந்த ரோபோட்டின் உதவியுடன் தன் குடும்பத்தின் இழப்பிற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து பழி தீர்த்தாரா என்பதுதான் இதன் கதைக்களம். இந்த சயின்ஸ் பிக்ஷன் வெப்சீரிஸ் Apple TV+ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Vikings: Valhalla Season 3 - Netflix

Vikings: Valhalla

டேவிட் ஃப்ரேஸி, ஹன்னா க்வின், எமர் கான்ராய், ஜான் மேத்திஸ் உள்ளிட்டோர் இயக்கத்தில் சாம் கோர்லெட்லியோ சுட்டர்ஃப்ரிடா குஸ்டாவ்சன் நடிப்பில் உருவாகியுள்ள Vikings: Valhalla வெப்சீரிஸின் மூன்றாவது சீசன் இது. ஆக்‌ஷன், அட்வன்சர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

EKAM (கன்னடம்) - EKAM channel

EKAM

சந்தீப் பி எஸ் மற்றும் சுமந்த் பட் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ் பி.ஷெட்டி, ஷைன் ஷெட்டி, மானசி சுதீர், பிரகாஷ் துமிநாட், ஷனில் குரு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் EKAM. இந்த வெப்சீரிஸ் EKAM channel ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

மகாராஜா (தமிழ்) - Netflix

மகாராஜா

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான இது Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Election (தமிழ்) - Amazon Prime Video

Election

தமிழ் இயக்கத்தில் விஜய்குமார், பிரீத்தி அஸ்ரானி, ஜார்ஜ் மரியன், பாவேல் நவகீதன், திலீபன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Election. தேர்தல் அரசியலில் நடக்கும் பிரச்னைகளைப் பேசும் இத்திரைப்படம் Amazon Prime Video ஓடிடி வெளியாகியுள்ளது.

ஹிட் லிஸ்ட் (தமிழ்) - Aha

ஹிட் லிஸ்ட்

கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் ஹிட் லிஸ்ட். இப்படத்தை சூரியக்கதிர் - கே.கார்த்திகேயன் இணைந்து இயக்கியிருக்கின்றனர். சரத்குமார், கெளதம் மேனன், சமுத்திரகனி உள்ளிடோர் நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் Aha ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பகலறியான் (தமிழ்) - Netflix

பகலறியான்

முருகன் ராஜ் இயக்கத்தில் வெற்றி, அக்‌ஷயா, சாய் தீனா, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பகலறியான். ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Mean Girls (ஆங்கிலம்) - Amazon Prime Video

Mean Girls (ஆங்கிலம்)

சமந்தா ஜெய்ன், ஆர்டுரோ பெரெஸ் ஜூனியர் இயக்கத்தில் அங்கூரி ரைஸ், ரெனி ராப், ஆலி கிராவல்ஹோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Mean Girls. கல்லூரி நண்பர்களின் காதல், நட்பு உள்ளிட்டவற்றை ஜாலியாகச் சொல்லும் இத்திரைப்படம் Amazon Prime Video ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Harom Hara - The Revolt (தெலுங்கு) - Aha

Harom Hara

ஞானசாகர் இயக்கத்தில் சுதிர் பாபு, மால்விகா ஷர்மா, சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Harom Hara - The Revolt. ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது Aha ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Mandakini  (மலையாளம்) - Manorama MAX

Mandakini

வினோத் லீலா இயக்கத்தில் அல்தாப் சலீம், அனார்கலி மரிக்கார், கணபதி எஸ்.பொதுவால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Mandakini. இத்திரைப்படம் Manorama MAX ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.