கணவனுடன் சண்டை; கோயிலில் அடைக்கலம் - கஞ்சா கலந்த தேனீர் கொடுத்து பாலியல் வன்கொடுமை, கொலை
மும்பை அருகில் ஷில் தைகர் எனும் பகுதியில் இருக்கும் மலைப்பகுதியில், பெண் ஒருவரின் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அப்பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். அப்பெண் யார் என்பதை அடையாளம் கண்ட போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் கொலை செய்யப்பட்ட பெண் கோயிலுக்குள் செல்வது, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
ஆனால் அதன் பிறகு அப்பெண் கோயிலில் இருந்து வெளியில் வரவில்லை. அப்பெண் பேலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், அவரின் கணவர் தன் மனைவியை காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்திருந்தார் என்பதும் தெரிய வந்தது. மாலையில் அப்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே கணவருடன் சண்டையிட்டுக்கொண்டு அப்பெண் வீட்டை விட்டு வெளியில் வந்துள்ளார்.
அவர் நேராக அங்குள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். இதையடுத்து கோயிலில் இருந்தவர்களை விசாரித்து பார்த்த போது கோயிலில் ஏற்கனவே இருந்த பூஜாரி வெளியூர் சென்று இருந்தார். அவர் கோயிலை கவனித்துக்கொள்ள ஒரு பூஜாரியையும், இரண்டு ஊழியர்களையும் நியமித்துச்சென்று இருந்தார். அவர்கள் மூவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீஸார் மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அப்பெண் தனியாக கோயிலுருக்கு வந்திருப்பதை அறிந்த ஊழியர்கள் அப்பெண்ணிற்கு கஞ்சா கலந்த தேனீர் குடிக்க கொடுத்தனர். அதனை குடித்த அப்பெண் ஒரு வித போதையான நிலைக்கு சென்றிருக்கிறார். இதை பயன்படுத்தி அப்பெண்ணை மூவரும் பாலியல் வன்கொடுமை செய்து விட்டனர். காலையில் அப்பெண் எழுந்தவுடன் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதை அறிந்து அவர்களிடம் கேட்டு தகராறு செய்தார்.

அதோடு அங்கிருந்து அப்பெண் தப்பித்துச்செல்ல முயன்றார். அப்பெண் தப்பிச்சென்று போலீஸில் புகார் செய்துவிடுவார் என்று பயந்து மூன்று பேரும் சேர்ந்து அப்பெண்ணின் தலையை பிடித்து சுவற்றில் அடித்துள்ளனர். அதோடு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை அங்குள்ள மலைப்பகுதியில் தூக்கிப்போட்டுவிட்டனர். அவர்கள் மூவரிடமும் விசாரித்த போது தெரிய வந்தது. இதையடுத்து சாம்சுந்தர், சந்தோஷ் குமார், ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை தங்களது காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


