வேலூர்: 3 சிறுவர்கள் பலி... பிறந்த நாளில் ஏற்பட்ட விபரீதம் - நடந்தது என்ன?!
வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகேயுள்ள திருவலம் பெரிய ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன் - செம்பருத்தி. இவர்களுக்கு 10 வயதில் ராஜா, 8 வயதில் ஸ்ரீஷாந்த் என்று 2 மகன்கள் இருந்தனர். இதில், ஸ்ரீஷாந்துக்கு இன்று பிறந்த நாள். இதனால், புதிய ஆடைகளை உடுத்திக்கொண்டு உற்சாகமாக இருந்தான் ஸ்ரீஷாந்த். இன்று விடுமுறை என்பதால், அண்ணனும், தம்பியும் பக்கத்திலுள்ள ஏரிக்கரைப் பகுதியில் கிரிக்கெட் விளையாடச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, 2 பேரும் ஏரித் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர். பந்து ஏரிக்குள் விழுந்ததாகவும் அதை எடுக்க முயன்றபோது மூழ்கியிருக்கலாம் அல்லது விளையாடி முடித்த பிறகு இருவரும் விபரீதம் அறியாமல் குளிக்க இறங்கியிருக்கலாம் எனவும் உறுதிப்படுத்த முடியாத முதற்கட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதையடுத்து, திருவலம் காவல் நிலையப் போலீஸார், சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மகன்களையும் பறிகொடுத்த வேதனையில் பெற்றோரும், உறவினர்களும் கதறித் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும், இளைய மகன் ஸ்ரீஷாந்த் பிறந்த நாளன்றே பலியாகியிருப்பது, அந்தக் கிராமத்தையே துயரத்தில் ஆழ்த்திருக்கிறது.
மேலும் ஓர் துயரச் சம்பவம்:
வேலூர், சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதி நடராஜன் - கீதா. இவர்களின் 14 வயது மகன் செந்தில், இன்றைய தினம் அதே பகுதியிலுள்ள கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றிருக்கிறான். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவன் செந்திலும் மூழ்கி உயிரிழந்திருக்கிறான். தகவலறிந்துவந்த பாகாயம் காவல் நிலையப் போலீஸார், சிறுவன் செந்திலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட இந்தக் கல்குவாரி குட்டையில் சிறுவர்கள் உயிரிழப்பும் தொடர்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, `பெற்றோர்கள் கவனத்திற்கு..?’ என போலீஸாரும், `ஆபத்தான கல்குவாரி குட்டைகள், ஏரிப் பகுதிகளுக்குப் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


