13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்... பாஜக கூட்டணிக்கு `ஷாக்’ கொடுத்த இந்தியா கூட்டணி கட்சிகள்!

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 7 மாநிலங்களில் காலியாக இருந்த 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலையில் எண்ணப்பட்டது. இதில் தமிழகத்தில் நடந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்ட மொஹிந்தர் பகத் 23 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.கவின் சீத்தலை தோற்கடித்தார். மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரானாகட், தக்‌ஷின், மானிக்தலா ஆகிய 4 தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

ஹிமாச்சல பிரதேசத்தில் தெஹ்ரா தொகுதியில் முதல்வர் சுக்விந்தர் சிங் மனைவி கம்லேஷ் தாக்குர் வெற்றி பெற்றார். கம்லேஷ் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டுள்ளார். நலகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ஹமிர்புர் தொகுதியில் பா.ஜ.கவின் ஆசிஷ் சர்மாவும் வெற்றி பெற்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரினாத், மங்கலுர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மத்திய பிரதேசத்தில் காலியாக இருந்த ஒரே தொகுதியான அமர்வார் தொகுதியில் பா.ஜ.கவின் கம்லேஷ் பிரதாப் வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இப்போது போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்.

பீகாரில் நடந்த ஒரு தொகுதிக்கான தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த போதிலும் அங்கு 2 தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணி 10 தொகுதியிலும், பா.ஜ.க இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.