சென்னை: வழிபறி, செயின் பறிப்பு... ஒரே நாளில் இரண்டு சம்பவங்கள் - சிக்கிய பிரபல திருடன்!

சென்னை உள்ளகரம் கருணாநிதி நகர், இந்திரா தெருவில் காயத்ரி (70) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 12-ம் தேதி கோயிலுக்குச் சென்றுவிட்டு, தனியாக இந்திரா தெருவில் நடந்து வந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் செயினைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான் திருடன் ஒருவன். அதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரி, திருடன் திருடன் என சத்தம் போட்டார். அதைக் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து திருடனைப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் செயின் பறிப்பு திருடனைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து காயத்ரியின் மகன் ஹரிகரன் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற மடிப்பாக்கம் போலீஸார், மூதாட்டி காயத்ரியிடம் விசாரித்தனர்.

ஜெயபால்

பின்னர், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்அடிப்படையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஜெயபால் (38) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து நான்கரை சவரன் தங்கச் செயின் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். ஜெயபாலிடம் விசாரித்தபோது, மடிப்பாக்கம் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஏழுமலை என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்திருக்கிறார். அதுதொடர்பாகவும் ஏழுமலை கொடுத்த புகாரில் இன்னொரு வழக்கு ஜெயபால் மீது போலீஸார் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயபால் மீது ஏற்கெனவே சங்கர் நகர், ஜெ.ஜெ.நகர், கே.கே.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்ட ஜெயபாரலை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.