முதலீட்டில் லாபம் ஈட்டுவது எப்படி? தெரிந்துகொள்ள திருநெல்வேலி மக்களுக்கு அரிய வாய்ப்பு...
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது. ஆனால், புத்திசாலித்தனமாகவும், சட்ட ரீதியாகவும், நல்ல வருமானம் ஈட்டும் வகையில் சம்பாதிக்க அரசு அங்கீகரித்துள்ள முதலீடுகள் சிறந்த வழிகளாக உள்ளன. அவற்றில் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவை முதன்மையாக உள்ளன.
இப்போதுதான் மக்கள் பலருக்கும் பங்குச் சந்தை பற்றியும், மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஆனாலும், எதில் எப்படி முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அசெட் அலொகேஷன் என்றால் என்ன, செல்வத்தை உருவாக்க முதலீடுகளை எப்படி திட்டமிட வேண்டும், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் நஷ்டம் அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
முதலீடுகள் பற்றிய தெளிவு இல்லாமல் முதலீடுகளை மேற்கொண்டால் பணம் இருந்தாலும் பணக்காரன் ஆக முடியாத நிலைதான் உண்டாகும். முதலீட்டாளர்கள் சரியான பாதையில் தங்களின் முதலீடுகளைத் திட்டமிட நாணயம் விகடன் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. அந்த வரிசையில்,
நாணயம் விகடன் மற்றும் ஆம்ஃபி இணைந்து நீங்களும் முதலீடுகளும் என்ற நிகழ்ச்சியை திருநெல்வேலியில் வருகின்ற ஜூலை 21-ம் தேதியில் நடத்த திட்டமிட்டுள்ளது.

21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் காலை 10.30 மணி முதல் 12.30 வரை பழைய மதுரை ரோடு ஜங்ஷனில் உள்ள ஆர்.ஆர் இன் ஓட்டலில் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் நிதி நிபுணர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் மற்றும் பயிற்றுநர் சோம வள்ளியப்பன் சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். முன்பதிவு செய்து உங்கள் இருக்கையை இப்போதே உறுதி செய்யுங்கள். பதிவு செய்ய https://bit.ly/AMFIIAP
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


