`யார் அந்த சிறைப் பறவை..?’ - காட்டிக்கொடுத்த செல்போன்; கைதான மனநல ஆலோசகர்! - பின்னணி என்ன?

வேலூர் மத்தியச் சிறையில், `சீர்த்திருத்த சிறகுகள்’ திட்டத்தின்கீழ் அருணாச்சலம் என்பவர், கடந்த 6 மாதங்களாக மனநல ஆலோசகராகப் பணியில் இருந்தார். ``அனைத்து வகையான கைதிகளுக்கும் யோகா, தியானம், போதைப் பழக்கத்தில் இருந்து மீட்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்’’ என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். ஆனால், அருணாச்சலம் சிறை விதிகளைப் பின்பற்றாமல் உயர்ப் பாதுகாப்பு அறைகளில் அடைக்கப்பட்டுள்ள ரௌடிகள் உள்ளிட்ட கைதிகள் பலரிடம் நட்புப் பாராட்டிக்கொண்டு, அவர்கள் சொல்லும் தகவல்களை வெளியில் இருக்கும் அவர்களின் கூட்டாளிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் தெரியப்படுத்தி, பணம் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

வேலூர் மத்தியச் சிறை

சிறை விவகாரங்கள் வெளியில் கசிவதைக் கண்டுபிடித்த உயரதிகாரிகள், அந்த `சிறைப் பறவை யார்?’ என்று விசாரிக்கத் தொடங்கினர். மனநல ஆலோசகர் அருணாச்சலத்தின் நடவடிக்கைகள்மீது சந்தேகம் படர்ந்தது. இந்த நிலையில், உயர் பாதுகாப்பு அறையில் இருந்த கைதி ஒருவரிடம் வெகுநேரம் பேசிவிட்டு வந்த அருணாச்சலத்திடம் இருந்து செல்போனை வாங்கி சோதனைக்குட்படுத்தினர். அதில், கைதிகளுக்குத் தொடர்புடைய நபர்கள் பலரிடம் அருணாச்சலம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, பாகாயம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அருணாச்சலத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதையடுத்து, அருணாச்சலம் முன்ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.