Harry Potter: 17 ஆண்டுக்கு முன் திருடிய புத்தகத்தை திருப்பி கொடுத்த இளைஞர்; JK Rowling Reaction என்ன
கேரளாவில் உதவி இயக்குநர் ரீஸ் தாமஸ், பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்த புத்தகத் திருட்டைப் பற்றியும், அதைத் திருப்பிக் கொடுத்த அனுபவத்தைப் பற்றியும் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள முவட்டுப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ரீஸ் தாமஸ். புத்தகப் பிரியரான தாமஸ் இப்போது மலையாளத் திரைப்படத்துறையில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். இவர் தனது பதினான்காம் வயதில், ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் தொடரின் ஆறு புத்தகங்களையும் படித்துள்ளார். இறுதியாக ஏழாவது மற்றும் கடைசி புத்தகமான தி டெத்லி ஹாலோஸ் (Deathly Hallows) வெளியானது. ரீஸ் அதை படிக்க ஆசைப்பட்டார். ஆனால் அதை வாங்க பணம் இல்லை.
அவர் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர், அதோடு பெற்றோரிடம் பணம் கேட்க விரும்பவில்லை. அதனால் அந்தப் புத்தகத்தைத் திருட முடிவு செய்தார். பெரு முயற்சிக்குப் பிறகு அதைத் திருடி படித்துவிட்டார் தாமஸ். ஆனால் சில தினங்களுக்குப் பின்னர் அந்தக் கடையின் உரிமையாளர், தாமஸ் புத்தகத்தைத் திருடியதைக் கண்டுபிடித்துவிட்டார். அதைத் தெரிந்துகொண்ட தாமஸ், மீண்டும் அந்தக் கடைக்கே செல்லவில்லை.
இந்நிலையில் பதினேழு வருடங்களுக்கு முன்பு திருடிய அதே புத்தகத்தை, அந்தக் கடைக்காரரிடமே திருப்பிக் கொடுத்துள்ளார். நெகிழ்ச்சியடைந்த கடைக்காரர், புத்தகத்தை தாமஸிடமே திருப்பிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து அவருடைய X பதிவில், ”நான் அந்த திருட்டைச் செய்யும்போது ஏதோ ஹீரோவைப் போல உணர்ந்தேன். இச்சம்பவத்திற்குப் பிறகு நான் அந்தக் கடைக்கே செல்லவில்லை. பதினேழு ஆண்டுகளுக்கு பின்னர் அந்தக் கடை முதலாளியைப் பார்க்கும்போது, இருவரும் நிறைய பேசினோம். இதைப் பகிர்வதன் மூலம் புத்தகம் திருடுவதை ஊக்குவிப்பதாக நான் குற்றம்சாட்டப்படுவேன் என்று எனக்குத் தெரியும், எனவே தயவுசெய்து புத்தகங்களைத் திருடாதீர்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
I know Ill be accused of encouraging book stealing by sharing this, so PLEASE DONT STEAL BOOKS, BOOK STEALING IS BAD. Anyway, this is the loveliest thing and made me really happy. https://t.co/9b0LBdE5YF
— J.K. Rowling (@jk_rowling) July 9, 2024
அதேபோல அந்தப் புத்தகத்தின் ஆசிரியை ஜே.கே.ரவுலிங், ``இதைப் பகிர்வதன் மூலம் புத்தகத்தை திருடுவதை நான் ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டுக்குள்ளாவேன் என்பதை அறிவேன். அதனால் புத்தகங்களைத் திருடாதீர்கள்... அது மிகவும் மோசமான பழக்கம். எப்படியிருந்தாலும், இது மிகவும் அழகான விஷயம், என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.” எனப் பதிவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


