வலுக்கும் வார்த்தைப் போர்…அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்…
கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம், பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் என தமிழகமே பரபரப்பாக காணப்பட்டது கடந்த ஒரு மாதமாக, விஷச் சாராய உயிர் பலிக்கு பிறகு அதிகாரிகள் மாற்றம், தீவிர சாராய தேடுதல் வேட்டை என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்லியதன் பிறகு துவங்கியுள்ளது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே வார்த்தை போர்.
செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடி என அண்ணாமலை பதிலடி கொடுக்க, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆட்டுக்குட்டிக்கு அறிவுரை சொல்லும் விநோத போராட்டம் வரை செய்தனர் காங்கிரஸ் கட்சியினர்.
தன்னை பற்றி தெரியாமல் அண்ணாமலை அடுக்கடுக்காக அவதூறாக பேசிவருகிறார் என செல்வப்பெருந்தகை பேச, இப்படி சங்கிலி தொடராக நீண்டு கொண்டே வருகிறது வாய்ச் சொல் யுத்தம்.

Jeyakumar palanisamy
இது ஒரு புறம் இருக்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையை ஞானி என விமர்சிக்க, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலையை வேதாளம் என விமர்சித்தார்.
தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கு எதிராக நிற்கும் பேய்களை வந்த வேதாளம் தான் நான் அண்ணாமலை பதிலளிக்க, இப்படி வார்த்தைப் போரால் அனல் பறந்து வருகிறது தமிழக அரசியல் களம்.
The post வலுக்கும் வார்த்தைப் போர்…அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்… first appeared on Tamilnadu Flash News.மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


