விருதுநகர்: திருமணம் மீறிய உறவு; கண்டித்த குடும்பத்தினர் - சந்திப்பை தவிர்த்த இளம்பெண் வெட்டிக் கொலை

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு வந்த இளம்பெண்ணை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் சந்திப்பை தவிர்த்து வந்த அவரை, உறவினர் இளைஞர் வெட்டிக்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "காரியாப்பட்டியை அடுத்த அல்லிக்குளத்தை சேர்ந்தவர் வீமராஜா. இவரின் மனைவி விமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இந்த தம்பதியரின் உறவினர் ராஜபாண்டி. விருதுநகரை அடுத்த மத்தியசேனை பகுதியில் வசித்துவரும் ராஜபாண்டி, அடிக்கடி இந்த தம்பதியரின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இந்த பழக்கவழக்கத்தில் ராஜபாண்டிக்கும் வீமராஜா மனைவிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த குடும்பத்தினர், இருவரையும் கண்டித்துள்ளனர். இதையடுத்து அப்பெண் ராஜபாண்டியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், தன்னுடன் தொடர்ந்து பேசுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

கொலை

இந்தநிலையில் நேற்று பகலில் வங்கிக்கு செல்வதற்காக தனது உறவினரை அழைத்துக்கொண்டு விமலா காரியாபட்டி மெயின் பஜாருக்கு வந்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து அங்கு வந்த ராஜபாண்டி, வங்கி அருகில் வைத்து இளம்பெண்ணை மடக்கி தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியிருக்கிறார். இதற்கு அப்பெண் உடன்பட மறுக்கவே, கடைசியாக உன்னோடு சிறிது நேரம் பேசவேண்டும். ஆகவே என்னோடு வா என கட்டாயப்படுத்தி அவரை அங்கிருந்து டூவீலரில் அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து காரியாப்பட்டியிலிருந்து எஸ்.கல்லுப்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தின் அருகே உள்ள புளியமரப்பகுதியில் வைத்து இளம் பெண்ணுடன், ராஜபாண்டி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கொலை

இதில் அவர்கள் இருவருக்குள்ளும் வாய் தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளம் பெண்ணை சரமரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. இந்தக்கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்த காரியாபட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜபாண்டியை கைது செய்தனர்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.