நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு: அடித்துச் செல்லப்பட்ட 2 பயணிகள் பேருந்து - 63 பேரின் நிலை என்ன?!
கடந்த ஒரு வாரமாக நேபாளத்தில் கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால், நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஏற்பட்டுவரும் நிலச்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 2 பயணிகள் பேருந்து, நிலைகுலைந்து திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தப் பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர் கனமழை, திரிசூலி ஆற்றில் வெள்ளம், நிலச்சரிவு என இயற்கை பேரிடர் மீட்புப்பணிக்கு பெரும் இடையூறாக இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக சித்வானின் தலைமை மாவட்ட அதிகாரி யாதவ், ``முதற்கட்ட தகவல்களின்படி, அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவால், 24 பயணிகளுடன் காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏஞ்சல் பேருந்தும், காத்மாண்டுவிலிருந்து 41 பேருடன் ரவுதாஹாட்டில் உள்ள கவுர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கணபதி டீலக்ஸ் பேருந்தும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.
நாங்கள் விபத்து நடந்த இடத்தில் இருக்கிறோம். தேடுதல் பணி நடந்து வருகிறது. இடைவிடாத மழை பெரும் இடையூறாக உள்ளது. கணபதி டீலக்ஸ் பேருந்தில் பயணித்த மூன்று பயணிகள் பேருந்திலிருந்து குதித்து தப்பியிருக்கின்றனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விபத்து குறித்து நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால் எக்ஸ் பக்கத்தில், ``நாராயண்காட் - முகிலின் சாலைப் பிரிவில் பேருந்து நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து அறிந்து கவலையடைந்தேன். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. மீட்புப் பணியில் இருக்கும் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை தேடித் திறம்பட மீட்குமாறு, உள்துறை நிர்வாகம் உட்பட, அரசின் அனைத்து நிறுவனங்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


