உயரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம்… எந்த நிறுவனம் எவ்வளவு உயர்த்தி உள்ளது?

சமீபத்தில் மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய அறிவிப்பு ஒன்று வெளிவந்திருக்கிறது. அதாவது, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பலவும் டேர்ம் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தைக் கணிசமாக உயர்த்தி இருக்கின்றன.

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ், மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் 2-3 சதவிகித அளவுக்குப் பிரீமியத்தை உயர்த்தி உள்ளதாகக் கூறியுள்ளன.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 60 மற்றும் அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை 10 சதவிகிதம் உயர்த்துவதாகக் கூறியுள்ளது. 

இன்ஷூரன்ஸ் என்பது முதலீடு அல்ல

இவை டேர்ம் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தை உயர்த்துவதற்கான காரணங்களாகத் தற்போதைய வாழ்க்கை சூழல், வயது, பாலினம், வேலை, உடல்நலம் மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றைக் கூறுகின்றன.

சமீப காலங்களில் இறப்புகள் அதிகரித்து, க்ளெய்ம் விகிதமும் அதிகமாக இருப்பதால் பிரீமியத்தை உயர்த்துவதாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இறப்புகளின் விகிதத்தை வைத்தும் எதிர்காலத்தில் க்ளெய்ம் விகிதம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை வைத்தும்தான் இவை பிரீமியத்தை உயர்த்தி உள்ளதாகக் கூறுகின்றன. 

கலங்கடிக்கும் இன்ஷூரன்ஸ் பிரீமியம்

மக்கள் ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வருகின்ற சூழலில் குடும்பப் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்தியது மிடில் கிளாஸ் மக்களுக்குக் கூடுதல் சுமையாக இருக்கலாம். ஆனாலும், குடும்பத்தின் நலன் கருதி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதுதான் புத்திசாலித்தனம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். எவ்வளவு விரைவில் எடுக்கிறீர்களோ அவ்வளவு குறைவான பிரீமியம் செலுத்தலாம். வயது ஆக ஆக பிரீமியம் அதிகரிக்கும் என்பதையும், ஒவ்வொரு நிதி ஆண்டிலும் கணிசமாக பிரீமியம் உயர்த்தப்பட வாய்ப்புகள் அதிகம் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். 

டேர்ம் பிளானில் பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும். பாலிசி காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கும். மற்றபடி பாலிசி முதிர்வில் தொகை எதுவும் கிடைக்காது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.