Tamannaah: தமன்னாவுடனான என் பந்தம் அழகானது..! - காதல் குறித்த சர்ச்சைகளுக்கு விஜய் வர்மா விளக்கம்

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. 

தனது ஆரம்பக் காலங்களில் உச்சத்திலிருந்த தமன்னா சமீபகாலமாக மிகக் குறைந்த அளவிலான திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் நடனமாடி ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்தி வெப்சீரிஸ்களிலும், திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

விஜய் வர்மா, தமன்னா

பாலிவுட் திரையுலகில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் விஜய் வர்மாவுடன் இணைந்து Lust Stories 2 வெப்சீரிஸில் தமன்னா நடித்திருந்தார். இதற்குப் பிறகு தமன்னாவும் விஜய் வர்மாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதையடுத்து நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த தமன்னா - விஜய் வர்மா இருவரும் காதலித்து வருவதாகப் பாலிவுட்டில் புரளிகள் பரவின. ஆனால், இது குறித்து இருவரும் எந்தவிதமான பதிலும் கூறாமல் அமைதி காத்தனர். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் நடிகர் விஜய் வர்மா, "ஆரம்பக் காலத்தில் இதுபோன்ற செய்திகளைப் பார்க்கும்போது எங்களுக்கே ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.

விஜய் வர்மா, தமன்னா

எங்களது தனிப்பட்ட விஷயங்களையும், பந்தங்களையும் தெரிந்து கொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களா என்று வியப்பாக இருந்தது. தமன்னாவுக்கும் எனக்கும் ஆழமான, அன்பான பந்தம்தான் இருக்கிறது. எங்களைப் பற்றி சமூகவலைத்தளங்களில் பரவும் புரளிகளை நாங்கள் இருவருமே என்ஜாய் பண்ணிப் பார்ப்போம்" என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.