UPSC/TNPSC: ஆளுமைகள் பங்கேற்கும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் - கலந்துகொள்வது எப்படி?

ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

இது போன்ற பயிற்சி முகாமை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆனந்த விகடனும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியும் இணைந்து நடத்தியிருக்கின்றன. இந்த முறை UPSC/TNPSC குரூப் 1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி? என்கிற தலைப்பில் இந்தப் பயிற்சி முகாம் நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வு சென்னை எத்திராஜ் கல்லூரியில் வருகிற ஜூலை 14-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் ஒவ்வொரு முறையும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் எனப் பல ஆளுமைகள் பங்கேற்று அரசுப் பணி கனவுடன் வந்திருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுவார்கள்.

UPSC / TNPSC Group 1, 2 Event

அது போல இந்த முறையும் கோ-ஆப்டெக்ஸின் மேலாண்மை இயக்குநர் R.ஆனந்த குமார் ஐ.ஏ.எஸ், சென்னைப் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் R. சுதாகர் ஐ.பி.எஸ், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் சத்ய ஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் பங்கேற்று உரையளிக்கவுள்ளனர்.

ஆர்.சுதாகர் 2003-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பணிக்குத் தேர்வானார். தருமபுரி மற்றும் தேனி மாவட்டத்தின் தலைமைக் காவலராக இருந்தார். அடையாறு, புளியந்தோப்பு மற்றும் அம்பத்தூர் ஆகிய வட்டங்களின் துணை ஆணையராக 2017-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 2017 முதல் 2019 வரை சென்னை போக்குவரத்து இணை ஆணையராகவும் 2019 முதல் 2021 வரை சென்னை கிழக்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் இருந்தார். 2021-ல் மதுரை காவல் துறை துணை தலைவராகவும் (Deputy Inspector General of Police) பதவி வகித்தார். அதன் பிறகு 2021 முதல் 2023 வரை கோவை மேற்கு மண்டலத்திமுடைய காவல்துறை தலைவராகவும் (Inspector General of Police) இருந்தார். தற்போது சென்னைப் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையராகப் பதவி வகித்து வருகிறார். இப்படியான அனுபவம் கொண்ட சுதாகர் வருகிற ஜுலை 14-ம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

ஆர். சுதாகர்

காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வுக்கு அனுமதி இலவசம். ஆனால், முன்பதிவு செய்திருக்க வேண்டும். இந்த இலவசப் பயிற்சி முகாமில் ஓராண்டு இலவச பயிற்சிக்கான உதவித்தொகை தேர்வும் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக இந்தியக் குடிமைப் பணி தொடர்பான நடப்பு நிகழ்வுகள், முதல் நிலை மற்றும் முதன்மை நிலை தேர்வுகளுக்கான கேள்வி பதில் தாள்கள் வழங்கப்படும்.

இந்த முகாமில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறீர்களா? உடனடியாக கீழே இணைக்கப்பட்டுள்ள கூகிள் ஃபார்மை பூர்த்தி செய்யுங்கள் அல்லது இந்த எண்ணுக்கு (044 - 66802997) உடனடியாக மிஸ்டு கால் கொடுத்து முன்பதிவு செய்யுங்கள்!
Loading…

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.