Champions Trophy: பாகிஸ்தான் செல்ல பிசிசிஐ மறுப்பு? கிரிக்கெட்டில் தொடரும் இந்தியா-பாக்., சர்ச்சை!
சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதற்கான அட்டவணையை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது சர்வதேச கிரிக்கெட் வாரியம். இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளைப் பாகிஸ்தானில் நடத்தாமல், இலங்கை, துபாயில் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
2005ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று எந்தத் தொடர்களிலும் பங்கேற்கவில்லை. கடந்த 2023 ஆசியக் கோப்பைத் தொடரின்போதே இந்திய அணி பாகிஸ்தான் செல்வதற்குத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்திருந்தது.
இந்த விவகாரத்தில், "இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க மாட்டோம்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியதும், "இந்திய அணி எங்குச் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை.

இது தொடர்பான முடிவை மத்திய அரசுதான் எடுக்கும். எனவே அந்த முடிவை நாங்கள் மட்டுமே எடுக்க முடியாது" என்று பி.சி.சி.ஐ-யின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஜர் பின்னி வெளிப்படையாகப் பேசியிருந்ததும் விவாதப் பொருளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்திய அணி, பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ மறுப்புத் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கிரிக்கெட் களத்தில் தொடரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான இந்த சர்ச்சை சரியானதா என்பது குறித்து கமெண்டில் பதிவிடவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


