Hardik Pandya: ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்தா? வதந்திகளுக்கு மறைமுகமாகப் பதிலளித்த மனைவி நடாஷா!

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் நடாஷா ஸ்டான்கோவிக்கும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த பாண்டியா என்ற குடும்பப் பெயரை நடாஷா ஸ்டான்கோவிக் நீக்கினார். ஐ.பி.எல். 2024 தொடரின் போட்டிகளுக்கும் செல்லாமல் இருந்தார்.

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா

மேலும், இந்திய அணி கோப்பையை வென்றபோது ஹர்திக்கிற்கு வாழ்த்து தெரிவிக்காமலிருந்தது, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு ஹர்திக் பாண்டியா தனியாகச் சென்றது என அனைத்தையும் குறிப்பிட்டு இவர்கள் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில் மனிதர்கள் குறித்துத் தீர்மானிப்பதைச் சற்று குறைத்துக் கொள்ளுங்கள் என்று நடாஷா வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோவில், "ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது குணாதிசயங்களையோ எப்படி நாம் இவ்வளவு விரைவாகத் தீர்மானித்து விடுகிறோம்? நம் குணாதிசயங்களை மீறி யாராவது ஒருவர் செயல்பட்டால் எந்த ஒரு அனுதாபமும் இன்றி அவர்களை உடனே இப்படித்தான் என்ற முன்முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா

ஒருவரின் வாழ்வில் என்ன நடக்கிறது என்று நமக்கு முழுமையாகத் தெரியாது. அதனால் மனிதர்கள் குறித்துத் தீர்மானித்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சற்று பொறுமையாக எதையும் அணுகுவது நல்லது" என்று வதந்தி பரப்புபவர்களை மறைமுகமாகச் சாடியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.