Sundeep Kishan: `காலாவதியான அரிசி, சுகாதார சீர்கேடு - நடிகர் சந்தீப் கிஷன் உணவகத்தில் சோதனை

மாநகரம், மாயவன், தனுஷுடன் கேப்டன் மில்லர் உள்ளிட்டப் படங்களில் நடத்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். இவர் `விவாஹா போஜனம்பு எனும் உணவகத்தை நடத்தி வருகிறார். தமிழ்நாடு, ஆந்திரா போன்ற இடங்களில் இவரின் விவாஹா போஜனம் உணவகம் இருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானாவின் உணவுப் பாதுகாப்பு ஆணையர் குழு விவாஹா போஜனம் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டது.

விவாஹா போஜனம் உணவகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

இந்த ஆய்வின் முடிவு குறித்து, உணவு பாதுகாப்பு ஆணையர் குழுவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், ``காலாவதியான சிட்டிமுடியாலு அரிசி (25 கிலோ), 500 கிராம் தேங்காய் துருவல் செயற்கை உணவு வண்ணங்களுடன் கண்டறியப்பட்டது. பாத்திரங்களில் இருந்த மூல உணவுப் பொருள்கள், அரைக்கப்பட்ட உணவுகள் சரியாக மூடப்படவில்லை. சில குப்பைத் தொட்டிகள் திறந்தே கிடந்தன. உணவை கையாளுபவர்களுக்கு மருத்துவ தகுதி சான்றிதழ் இல்லை.

சமையலறை வளாகத்தின் வடிகால்களில் தண்ணீர் தேங்கி இருந்தது" என விதிமீறல்கள் குறித்து குறிப்பிட்டிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருக்கும் நடிகர் சந்தீப் கிஷன், ``எனது அன்பானவர்களுக்கு... மிகைப்படுத்தப்பட்ட தலைப்பு கலாசாரத்தை தவிர்த்து உண்மைகளை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சந்தீப் கிஷன்

விவாஹா போஜன உணவகம் கடந்த 8 ஆண்டுகளாக நேர்மையுடன் செயல்பட்டு, விசுவாசமான வாடிக்கையாளர்களை உருவாக்கியிருக்கிறோம். உங்களால் வழங்கப்பட்ட அன்பை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துகொள்ள மாட்டோம். கண்டுபிடிக்கப்பட்ட காலாவதியான அரிசி மூட்டை விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்ட மாதிரி அரிசி. சமூக ஊடகங்களில் பரவும் அனைத்து படங்களும் உணவகத்திலிருந்து எடுக்கப்பட்டவையல்ல" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.