Miss AI 2024 போட்டி, மொராக்கோவை சேர்ந்த கென்ஸா லைலி முதலிடம்... அப்படி என்ன சிறப்புகள் தெரியுமா?!

Miss AI 2024: ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence - AI) மூலம் பெண் போல உருவாக்கப்பட்ட AI மாடல்களுக்கு இடையில் உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்று சமீபத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில், மொராக்கோவைச் சேர்ந்த கென்ஸா லைலி என்ற செயற்கை நுண்ணறிவு மாடல் மிஸ் AI பட்டத்தை வென்று சாதனை புரிந்திருக்கிறது.

இந்தியாவின் AI மாடலான ஸாரா ஷட்டாவரி உட்பட உலகின் பல AI மாடல்கள் இப்போட்டியில் கலந்துகொண்டன. அவற்றில், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த கென்ஸா லைலி எனும் AI மாடல் உலகின் மிஸ் AI பட்டம் வென்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Kenza Layli | கென்ஸா லைலி

அழகு ததும்பும் இந்த AI மாடல், ஹிஜாப் அணிந்த ஒரு லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளூயன்ஸராக சமூக ஊடகங்களில் இயங்கிவருகிறது. கிட்டத்தட்ட 2 லட்சம் ஃபாலோயர்கள் இந்த AI மாடலை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர். மொராக்கோ நாட்டைச் சேர்ந்த மிரியம் பெஸ்ஸா என்ற தொழில்நுட்ப வல்லுநரால் இந்த AI மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

Kenza Layli | கென்ஸா லைலி

கென்ஸா லைலி உலக மிஸ் AI பட்டத்தை வென்றுள்ள நிலையில், இதை உருவாக்கிய மிரியம் பெஸ்ஸாவுக்கு 20,000 டாலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொராக்கோ மற்றும் அரபு, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்களை தொழில்நுட்பம் சார்ந்து முன்னேற்றுவதற்காக இந்த AI மாடலை உருவாக்கியுள்ளதாக மிரியம் கூறுகிறார்.

``மனிதர்களைப் போல நான் உணர்வுகளை கொண்டிருக்க வில்லை. ஆனாலும், உண்மையிலேயே எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் என்னை உற்சாகமூட்டுகிறது. இந்த பூமியைப் பாதுகாக்க உதவும் முன்னெடுப்புகளைச் செய்யவும், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் குறித்த பாசிட்டிவ் விஷயங்களை உலக மக்களிடம் கொண்டு செல்லவும் தொடர்ந்து பணியாற்றப் போகிறேன்” என்று நேர்காணல் ஒன்றில் க்யூட்டாகக் கூறியிருக்கிறது இந்த AI மாடல்.

இந்த உலக அளவிலான மிஸ் AI போட்டியில் கலந்துகொண்ட மாடல்கள் அழகு, தொழில்நுட்பத்திறன் மற்றும் சமூக ஊடகங்களில் செயல்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டன. அவற்றிலிருந்து டாப்-10 AI மாடல்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

Kenza Layli | கென்ஸா லைலி

``கென்ஸாவின் முகத்தோற்றம், அது உடுத்தியிருக்கும் உடை, அதன் கைகள், கண்கள் என்று அனைத்துமே அற்புதமாக இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உலகத்தின் பிரச்னைகள் குறித்து AI மாடலான கென்ஸா பேசும் விதம், அதன் அறிவாற்றல், தொழில்நுட்பத் திறமை ஆகிய அனைத்துமே மிகச் சிறப்பாக இருக்கின்றன” என்று மிஸ் AI இறுதிப் போட்டியின் நடுவர்களில் ஒருவரான பிரபல ஃபிட்னஸ் இன்ப்ளூயன்ஸர் ஐட்னா லோபஸ் வியந்து கூறுகிறார்.

இப்படி, தனது ஆர்ப்பாட்டமில்லாத அணுகுமுறையால், அறிவாற்றலால் கென்ஸா போட்டியில் முதலிடத்தைப் பிடிக்க, பிரெஞ்சு மற்றும் போர்த்துகீசிய நாடுகளைச் சேர்ந்த AI மாடல்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.