தூக்கத்தைக் கெடுத்ததாக தாயை 22 முறை குத்திக் கொலைசெய்த மகன் - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!
மும்பை கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள லேமிங்கடன் ரோட்டில் வசிப்பவர் சுபாஷ் வாக். இவரது தாயார் ரமாபாய் (78). ரமாபாயிக்கு வயது முதுமை காரணமாக இரவு நேரங்களில் தூக்கப் பிரச்னை இருந்தது. இதனால் தாய் மகன் இடையே அடிக்கடி சிறு சிறு சண்டை நடப்பதுண்டு. இரவில்தான் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு. இதனால் சுபாஷ் தூக்கம் பாதிக்கப்பட்டது. நேற்று இரவு இதே போன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அடிக்கடி தூக்கத்தை தொந்தரவு செய்ததால் கோபத்தில் சுபாஷ் தனது தாயாரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். கோபத்தில் 22 முறை கத்தியால் குத்தினார். ரமாபாயை கொலை செய்த பிறகு பக்கத்து வீட்டில் இருந்த தனது சகோதரனிடம் சென்று தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. சுபாஷ் வேலையில்லாமல் இருந்தார். அவரது மனைவி அவரை விட்டுச்சென்று இருந்தார். சுபாஷை கைது செய்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்!
நாசிக் மாவட்டத்தில் 75 வயது முதியவரை அவரது சகோதரர் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளார். நிபாட் தாலுகாவில் உள்ள நந்தூர் சிவார் என்ற கிராமத்தை சேர்ந்த கச்சேஷ்வருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே குடும்ப சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
கச்சேஷ்வர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரது சகோதரரும் அவரது சகோதரர் மகன்கள் இரண்டு பேரும் அங்கு வந்தனர். அவர்கள் கச்சேஷ்வரை பிடித்துக்கொண்டு அவரது உடம்பில் டீசல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தீ காரணமாக கச்சேஷ்வர் உதவி கேட்டு கத்தினார். உடனே பக்கத்து நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த கச்சேஷ்வர் உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


