Tripura HIV Cases: 828 மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு; 47 பேர் இறப்பு... பரவியது எப்படி?

திரிபுரா மாநிலத்தில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக, புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், திரிபுராவில் 2007 - 2024 வரையிலான 17 வருட புள்ளி விவரங்களின்படி, சுமார் 828 மாணவர்கள் ஹெச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIV

இது தொடர்பாக திரிபுராவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ``திரிபுராவில் 828 மாணவர்கள் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கும் திரிபுராவிலிருந்து படிக்கச் சென்றிருக்கும் மாணவர்கள் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TSACS) அதிகாரிகள்,``திரிபுராவில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஹெச்.ஐ.வி தொற்று பரவியுள்ளது. இந்த தொற்று மாணவர்களிடையே ஊசி மூலமும், போதைப்பொருள் பயன்பாடு மூலமும் விரைவாக பரவுவதற்கு காரணம் எனக் கருதுகிறோம். தினசரி ஐந்து முதல் ஏழு ஹெச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.

HIV (Representational Image)

புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையையும், உடனடி தீர்வு காணவேண்டிய கட்டாயத்தையும் உணர்த்துகிறது." எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

திரிபுரா ஜர்னலிஸ்ட் யூனியன், வெப் மீடியா ஃபோரம், TSACS இணைந்து நடத்திய ஊடக நிகழ்வின்போது, ​​மூத்த அதிகாரிகள், ``மாநிலம் முழுவதும் உள்ள 164 சுகாதார நிலையங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவு, இந்த தொற்று பரவல் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக பெற்றோர் அரசுப் பணிகளில் பணிபுரியும் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்தான் இந்த தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மே 2024 நிலவரப்படி, திரிபுராவின் ஏ.ஆர்.டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையங்களில் ஹெச்.ஐ.வி தொற்றால் 8,729 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ பராமரிப்புக்கு இந்த மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தீவிர மருத்துவ உதவிகள், பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சமூக ஈடுபாடு முயற்சிகள் இந்த மையங்கள் மூலம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.