செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…வழக்கை வேறு தேதிக்கு மாற்றிய நீதிமன்றம்…

சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக தமிழக மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி வருகிறார்.

செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்து வழக்கு விசாரணை வேறு தேதிக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

Supreme Court

Supreme Court

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஓராண்டிற்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருகிறார். இதனால் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியிருந்தார் செந்தில் பாலாஜி. இதன் மீதான விசாரணை இன்று வரவிருந்தது.

செந்தில் பாலாஜியின் உடல் நிலையை மனதில் கொண்டு அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரியிருந்தார்.

இதன் மீதான விசாரணை இன்று நடக்க இருந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தான் வேறு சில வழக்குகளில் இன்றும், நாளையும் ஆஜராக வேண்டியதாக இருப்பதால் ஜாமீன் மீதான விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப் பட்டது.

அமலாக்கத்துறை வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிக்கை மீதான விசாரணையை வருகின்ற வெள்ளிக் கிழமைக்கு ஒத்தி வைத்தார். நாளை மறு நாள இதன் மீதான இறுதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை நீதிபதியின் முன் வைத்தார். ஆனால் நீதிபதி அமாலக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று ஜாமீன் விசாரணையை நாளை மறு நாளுக்கு ஒத்திவைத்தது.

The post செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…வழக்கை வேறு தேதிக்கு மாற்றிய நீதிமன்றம்… first appeared on Tamilnadu Flash News.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.