உத்தரப்பிரதேசத்தில் இரண்டடுக்கு பஸ் மீது மோதிய பால் கன்டெய்னர் - 18 பேர் பலியான சோகம்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் பால் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, இரண்டடுக்கு பஸ் ஒன்றின் மீது மோதிக்கொண்டது. இதில் பஸ் சாலையில் கவிழ்ந்தது. பஸ் லக்னோ - ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்ற போது இந்த விபத்து நடந்தது. பீகார் மாநிலம் சிதார்மர்ஹி என்ற இடத்தில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த போது பால் கன்டெய்னர் லாரி, பஸ் மீது மோதிக்கொண்டது. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். மேலும் 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.

அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறார். இச்சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி கெளரங் கூறுகையில், ``அதிகாலை 5.15 மணிக்கு பீகாரில் இருந்து வந்த தனியார் பஸ் பால் கன்டெய்னர் மோதிக்கொண்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில் பஸ் அளவுக்கு அதிகமான வேகத்தில் சென்றதால் இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது. இது குறித்து மேற்கொண்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.