கைகளை பிடித்துக்கொண்டு தண்டவாளத்தில் படுத்து உயிரைவிட்ட தந்தை, மகன் - மும்பை அதிர்ச்சி

மும்பையில் புறநகர் ரயில்களில் விழுந்து சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் ரயிலில் அதிகப்படியான கூட்டம் காரணமாக தவறி விழுந்து அல்லது ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரயிலில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். அவ்வாறு உயிரிழப்பவர்களில் பலர் அடையாளம் காணப்படாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்டவர்களின் உடல்களை ரயில்வே போலீஸாரே தகனம் செய்துவிடுகின்றனர்.

இந்நிலையில் மும்பை அருகில் உள்ள வசாய் என்ற இடத்தில் வசித்து வந்த தந்தை - மகன் புறநகர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். வசாயை சேர்ந்த ஜெய் மேத்தா மற்றும் அவரது தந்தை ஹரிஷ் மேத்தா(60) ஆகியோர் பயந்தர் ரயில் நிலையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் இருவரும் கையை பிடித்தபடி படுத்துக்கொண்டனர். விராரில் இருந்து சர்ச்கேட் நோக்கி வந்த புறநகர் ரயில் பயந்தரில் நின்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வேகமெடுத்த போது தண்டவாளத்தில் இரண்டு பேர் படுத்து இருப்பதை ரயில்வே மோட்டார்மென் பார்த்தார்.

தந்தை, மகன்

உடனே அவர் ரயிலை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். ஆனால் அவரால் ரயிலை முழுமையாக நிறுத்த முடியவில்லை. இருவரும் தண்டவாளத்தில் தலையை வைத்திருந்தனர். அவர்கள் மீது ரயில் ஏறிவிட்டது. பின்னர் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு இருவரது உடல்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. குடும்ப பிரச்னையா அல்லது பணப்பிரச்னையா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரீஷ் மேத்தா ஷேர் புரோக்கராக இருக்கிறார். அவரது மகன் ஜெய் மேத்தா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்காக இருவரும் ரயில் தண்டவாளத்தையொட்டி சிறிது தூரம் நடந்து சென்றுள்ளனர். பின்னர் ரயில் வருவதை அறிந்து இருவரும் தண்டவாளத்தில் கையை கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டனர். இச்சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இருவரும் தற்கொலைக்கான கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.