வேலூர்: பாலியல் கொடூரனுக்கு 30 ஆண்டுகள் சிறை... சிறுமியிடம் அத்துமீறிய வழக்கில் தீர்ப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகேயுள்ள கிளித்தான்பட்டறைக் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்கனி - வயது 55. இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பரின் 6 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். `போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸார், அப்துல்கனியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்துல்கனி

கடந்த 2 ஆண்டுகளாக அப்துல்கனிக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டு, சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வேலூர் `போக்சோ’ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில், பாலியல் குற்றவாளி அப்துல்கனிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், இருபதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.