Hit & Run: வேகமாக வந்து மோதிய கார்... 15 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு இறந்த பெண்!
மகாராஷ்டிராவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இரு சக்கர வாகனத்தில் பி.எம்.டபிள்யூ கார் மோதியதில், பெண் ஒருவர் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்தது பின்னர் தெரியவந்தது. இது நடந்து சில நாள்கள் ஆகியிருக்கும் நிலையில், மேலும் ஒரு பெண் இது போன்ற கார் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். நாசிக்கில் உள்ள கங்காபூர் என்ற இடத்தில் வைசாலி (36) என்ற பெண் சாலையோரம் நின்றுகொண்டிருந்தார். அந்நேரம் வேகமாக வந்த வெள்ளை கலர் கார் அப்பெண் மீது மோதியது. கார் மோதிய வேகத்தில் அப்பெண் மேலே தூக்கி வீசப்பட்டு 20 மீட்டர் தூரத்தில் கீழே விழுந்தார்.
விபத்து நடந்த உடன் கார் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். விபத்து நடந்த போது அருகில் நின்ற இரண்டு பேர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அதற்குள் அப்பெண் பரிதாபமாக இறந்துபோனார். போலீஸார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் விபத்து பதிவாகி இருக்கிறது. அக்காட்சி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது. கடந்த மே 17-ம் தேதி புனேயில் 17 வயது வாலிபர் மது போதையில் கண்மூடித்தனமாக கார் ஓட்டியதில் இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியதில் பெண் உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

