கோலியின் இடத்தை நிரப்புவீர்களா?... நேர்மையாக பதிலளித்த ருத்துராஜ்!
ஐபிஎல் தொடரின் மூலம் கவனம் பெற்று தற்போது இந்திய அணியில் தனக்கான இடத்துக்கான தேடலில் இருக்கிறார் ருத்துராஜ். சமீபத்தில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி 20 போட்டியில் அவர் கோலி இறங்கும் மூன்றாவது இடத்தில் இறங்கி சிறப்பான இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார்.
அதனால் அவரிடம் விராட் கோலியின் இடத்தை நிரப்புவீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர்”அது மிகப்பெரிய விஷயம். இப்போதே விராட் கோலியுடன் ஒப்பிடுவது சரியாக இருக்கிறது. அது ஐபிஎல் தொடரில் தோனி பாயின் இடத்தை நிரப்புவீர்களா என்று கேட்பது போன்ற பெரிய கேள்வி.
என்னை பொறுத்தவரை ஒவ்வொரு வீரரும் தங்கள் சொந்த கேரியரைத் தொடங்கவேண்டும். உங்கள் சொந்த ஆட்டத்தை விளையாட வேண்டும். அதற்குதான் நான் இப்போது முன்னுரிமை கொடுக்கிறேன். தொடக்க ஆட்டக்காரராகவும், மூன்றாவது வீரராக களமிறங்குவதற்கும் பெரிய வித்தியாசமில்லை” எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.