ஆனி உத்திரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

ஜூலை மாதம் 12ஆம் தேதி ஆனி மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உத்திர நட்சத்திரம் வருகிறது. இந்த ஆனி உத்திரத்தை தான் ஆனி திருமஞ்சனம் என்று கூறுகிறார்கள். அன்றைய தினம் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடக்கூடிய ஒரு சிறப்பான தினமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட தினத்தில் நடராஜரின் அருளைப் பெறவும், தீர்க்க சுமங்கலி யோகம் பெறவும் பெண்கள் கூற வேண்டிய அற்புதமான மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆனி உத்திரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

சிவபெருமான் என்பவர் அபிஷேக பிரியர். அதனால்தான் பல ஆலயங்களில் சிவபெருமானிற்கு மேலே கங்கா தீர்த்தம் வைத்து அனுதினமும் கங்கா தீர்த்தம் சிவபெருமானின் தலையில் விழுவது போல் வைத்திருப்பார்கள். மேலும் பிரதோஷம், சிவராத்திரி போன்ற தினங்களில் சிவபெருமானுக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள். சிவபெருமானின் மறு அவதாரமாக திகழக்கூடிய நடராஜருக்கு அப்படிப்பட்ட அபிஷேக ஆராதனைகள் செய்வது கிடையாது.

அவருக்கென்று சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அந்த நாட்களில் ஒன்றுதான் ஆனி திருமஞ்சனம். அதாவது நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளுக்கு சமமாக கருதப்படுகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்து வரக்கூடிய அடுத்த மாதம் ஆனி மாதம் தேவர்களுக்கு மாலை நேரமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் உச்சி காலமான அக்னி நட்சத்திரம் முடிந்து வரும் மாலை நேரம் என்பதால் சிவபெருமானை குளிர்விக்கும் வகையில் அபிஷேகங்கள் செய்வதை தான் திருமஞ்சனம் என்று கூறுகிறோம்.

அப்படிப்பட்ட திருமஞ்சன நாளன்று பெண்கள் தங்களுடைய கணவர் தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி பார்ப்போம். இந்த மந்திரத்தை வீட்டு பூஜை அறையிலோ அல்லது அமைதியான ஒரு அறையிலோ கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு நடராஜரை மனதார நினைத்துக் கொண்டு மூன்று முறை உச்சரிக்க வேண்டும். அதுவும் மூன்று வேளை உச்சரிக்க வேண்டும்.

பிரம்ம முகூர்த்த நேரத்திலும், உச்சிப் பொழுதான 12:15 முதல் 1:15 வரையிலும், மாலை நேரமான 4:00 மணியிலிருந்து 7:30 மணிக்குள்ளும் இந்த மந்திரத்தை மூன்று முறை என்று அன்றைய தினம் ஒன்பது முறை உச்சரிக்க வேண்டும். இப்படி அன்றைய தினம் நாம் இந்த மந்திரத்தை பெண்கள் உச்சரிப்பதன் மூலம் அவர்களுடைய கணவன் தீர்க்க ஆயுளுடன் இருப்பார்கள் என்றும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மந்திரம்

க்ருபா ஸமுத்ர ஸீமுகம் த்ரிநேத்ரம்
ஜடாதரம் பார்வதி வாம பாகம்
ஸதாசிவம் ருக்ரமனந்த ரூபம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி

இதையும் படிக்கலாமே: ஆஷாட பஞ்சமி பரிகாரம்

சற்று சிரமமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை மூன்று வேளையும் மூன்று முறை உச்சரிப்பவர்களுக்கு நடராஜரின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு தீர்க்க சுமங்கலி யோகமும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

The post ஆனி உத்திரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.