Anant Ambani: சல்மான் கான் முதல் ரன்வீர் சிங் வரை - திருமண விழாவில் மஞ்சளில் நனைந்த நட்சத்திரங்கள்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் தம்பதிக்கு வரும் 12ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதற்காக முகேஷ் அம்பானியின் வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. தினமும் அம்பானி வீட்டில் எதாவது ஒரு திருமண சடங்கு நடந்து கொண்டே இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு சங்கீத் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு மணமக்களுக்கு மஞ்சள் பொடி வைக்கும் சடங்கு நடந்தது. இதில் பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான், ரன்வீர் சிங், சாரா அலிகான், அனன்யா பாண்டே, ஜான்வி, குஷி கபூர், அர்ஜூன் கபூர் உட்படப் பலர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரேயும் இதில் கலந்து கொண்டனர். பாலிவுட் பிரபலங்கள் விலை உயர்ந்த ஆடைகள் அணிந்து வந்த நிலையில் அவர்களது ஆடை முழுக்க மஞ்சளானது. இதில் மஞ்சள் பொடியைப் போடுவார்கள் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்ட சல்மான் கான் மஞ்சள் குர்தா அணிந்து வந்தார்.

ரன்வீர் சிங்கின் சட்டை, முகம் உடம்பு முழுக்க மஞ்சள் பொடியாக இருந்தது. மஞ்சள் பொடி வைக்கப்பட்டிருந்த இடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பாலிவுட் பிரபலங்கள் ஆடும்போது மஞ்சள் பொடியை வீசியடித்தனர். முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியும், அவரது மனைவி நீதா அம்பானியும் மிகவும் மகிழ்ச்சியாக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வெளியில் வந்தனர்.

மும்பை பாந்த்ரா-குர்லா வளாகத்தில் மூன்று நாள் நிகழ்ச்சியாகத் திருமணம் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் ஏற்கனவே வரத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்காக பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 12ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை இந்த விடுதிகளின் கட்டணம் 13 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக அதிகரித்து இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.