Natarajan: ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன், ஆனால்...- நடராஜன் சொல்வதென்ன?

தமிழக வீரரான நடராஜன் ஐபிஎல்-யின் ஆரம்பக்கட்டத்தில் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

சேலத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரியின் நிகழச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடராஜன் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், " முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நம்மால் இதைச் செய்ய முடியுமா என்று சந்தேகித்தால் நிச்சயமாக உங்களால் அதனை செய்ய முடியாது. சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து இன்று இந்த அளவிற்கு வந்திருக்கிறேன்.

தனியார் கல்லூரியின் நிகழச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நடராஜன்

அதற்குக் காரணம் என்னுடைய தன்னம்பிக்கையும் உழைப்பும் தான். அதே போல நீங்கள் பெரிய அளவிற்கு வந்துவிட்டால், நீங்கள் கடந்து வந்த பாதையை என்றும் மறந்து விடக்கூடாது. தான் நன்றி மறவாமல் இருப்பதால்தான் இவ்வளவு நல்ல உள்ளங்களை சம்பாதித்து இருக்கின்றேன்.என் உடை மாறி இருக்கலாம். அதற்குக் காரணம், நான் செல்லும் இடங்களுக்கு ஏற்ப உடையை அணிந்து கொள்வேன். என்றுமே பழசை மறக்க மாட்டேன். நீங்களும் இந்த நல்ல குணத்தை கல்லூரி பருவத்திலே விதைத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு நான் முதன் முதலில் செல்லும்போது தமிழ் தவிர எனக்கு எதுவும் தெரியாது. அங்கு முழுவதுமாக ஹிந்திதான். மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒரு மாதிரி தனியாக இருப்பதைப்போல் உணர்ந்தேன். அதனால் தொடக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் எனக்கு விளையாட்டு ரொம்பப் பிடிக்கும் என்பதால் கஷ்டங்களைத் தாண்டி விளையாடுவேன்.

நடராஜன்

இதெல்லாம் ஒரு பிரச்னை என்று நினைத்து ஒதுங்கியிருந்தால் இன்று என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆரம்பத்தில் பேசவே மிகவும் தயங்கினேன். அதனால் நீங்கள் தொடக்கத்தில் இருந்தே தயக்கமின்றி பேசக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.