IND vs SL: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித், கோலிக்கு ஓய்வு - கேப்டனாக போகும் வீரர் யார்?

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சேப்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. இப்போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாவேக்குச் சென்றுள்ளது. விராட் கோலி, ரோஹித் இருவரும் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்கு இளம் வீரர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக இத்தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா

ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 102 ரன்களுக்குள் சுருண்டு படுதோல்வியடைந்தது இந்திய அணி. இரண்டாவது போட்டியில் அபிஷேக் சர்மா சதமடிக்க, 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நம்பிக்கையளித்துள்ளது.

இந்த டி20 தொடர் முடிந்த கையோடு இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவும், விராத் கோலியும் விளையாட மாட்டார்கள் என்று தெரிகிறது. அதனால், இத்தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பிற்கு ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுலை இந்திய அணி தேர்வு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரோஹித், விராட் இடத்தை இவர்கள் இருவரும் நிரப்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலகும் நிலையில் கௌதம் கம்பீர் இந்த இலங்கை ஒருநாள் தொடருக்குத் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பு வகிப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.