திண்டுக்கல்: மாநகராட்சி வரிப்பணம் ரூ.4.66 கோடி கையாடல் - ஜூனியர் அசிஸ்டென்ட் மீது புகார்!
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டு மக்கள் குடிநீர், வீட்டுவரி, பாதாளச்சாக்கடை உள்ளிட்ட வரிகளை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி மையத்தில் செலுத்துகின்றனர். அவ்வாறு வசூலாகும் வரி வசூலை கணக்குபிரிவு அலுவலர்கள் சரிபார்த்து கருவூலத்தில் வைத்து மறுநாள் காலை வங்கியில் செலுத்த வேண்டும்.
இங்கு கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 2 லட்ச ரூபாயை கையாடல் செய்ததாக தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 2 லட்ச ரூபாய் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து சரவணன் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை உள்ள கணக்கு வழக்குகளை சரிபார்க்கும்படி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. இதில் சரவணன் மொத்தம் 4.66 கோடி வரிப்பணத்தை கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இதனை கண்காணிக்கத் தவறியதாகக் கூறி கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஸ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சரவணன் தந்தை மாநகராட்சி பணியில் இருந்தபோது உயிரிழந்தார். இதனால் கருணை அடிப்படையில் சரவணனுக்கு வாரிசு வேலை வழங்கப்பட்டது. சரவணன் மீது உரிய நடவடிக்கைை எடுத்து பணத்தை மீட்டுக்கொடுக்கும்படி மாவட்ட எஸ்.பியும் மாநகராட்சி ஆணையாளர் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2014 முதல் திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோதிலும், மாநகராட்சிக்கான வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடக்கவில்லை என மக்கள் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. இதற்கு மாநகராட்சி தரப்பில் போதி வரி வசூல் இல்லை என்பதால் வசதிகள் செய்து கொடுப்பதில் சிரமம் உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி வரி வசூலில் இருந்த 4.66 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


