OLA: இனி கூகுள் மேப் பயன்படுத்த மாட்டோம்! - ஓலா நிறுவனத்தின் முடிவிற்குக் காரணம் இதுதான்
தனது பயணங்களுக்கு இதுவரை கூகுள் மேப்களைப் பயன்படுத்தி வந்தது ஓலா நிறுவனம். தற்போது கூகுள் மேப்களிலிருந்து வெளியேறி தாங்களே உருவாக்கிய ஓலா மேப்களைப் பயன்படுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் வெளியிட்டிருந்த பதிவில், "கூகுள் மேப்ஸிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி செலவழித்து வந்தோம். ஆனால் தற்போது எங்களுடைய சொந்த ஓலா வரைபடத்திற்கு மாறி விட்டோம். இந்த செலவு இனிமேல் இல்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ஓலா மேப்ஸில் பல்வேறு புதிய வசதிகள் கொண்டு வரப் போவதாகவும் குறிப்பாக ஸ்ட்ரீட் வியூ, இண்டோர் இமேஜஸ் மற்றும் 3டி மேப் போன்ற கூகுள் மேப்பில் தற்போது இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும் கூடிய விரைவில் ஓலா மேப்பிலும் வர இருப்பதாக பவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
கடந்த மாதம் அசியூர் என்ற மைக்ரோசாப்டின் கிளவுட் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிலிருந்தும் ஓலா நிறுவனம் வெளியேறியது.
தற்போது கூகுள் மேப்பில் இருந்தும் வெளியேறி விட்டது. தாங்கள் உருவாக்கி இருக்கக்கூடிய இந்த ஓலா மேப்ஸை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என விரும்பினால் அதைத் தெரிவிக்கலாம் என்றும் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


