தஞ்சை: வீட்டில் பள்ளம் தோண்டியபோது கிடைத்த ஐம்பொன் சிலைகள்; `பேராசையால் போலீஸில் சிக்கிய கும்பல்!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு குழுவினர், தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 6-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காருக்குள் ஆறு சிலைகளை மறைத்து எடுத்து சென்றதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த, சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (42), மயிலாடுதுறை மாவட்டம், கொற்கை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (64) ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தியதுடன், சிலைகளைப் பறிமுதல் செய்தனர்.

காரில் கடத்தபட்ட சிலைகள்

இதில் காரில் எடுத்துச் செல்லப்பட்டது, 3 அடி உயரம் கொண்ட திரிபுராந்தகர், 2.75 அடி உயர வீணாதார தட்சிணாமூர்த்தி, 3.25 அடி உயர ரிஷபதேவர், தலா 2.75 அடி உயர மூன்று அம்மன் சிலைகள் என மொத்தம் ஆறு ஐம்பொன் சிலைகள் என்பதும்... வெளிநாட்டிற்கு விற்பனை செய்வதற்கு சிலைகளை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், ``லட்சுமணன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், புதிய வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது அந்த இடத்தில் ஆறு ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. இதை அவர் முறைப்படி அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்து வீட்டில் வைத்துவிட்டார்.

சிலைகள் கிடைத்த தகவலை தனது நண்பரான ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்துள்ளார். பிறகு ராஜேஷ் கண்ணன் தனது நண்பரும், லட்சுமணனின் மருமகனுமான சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் (39) என்பவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ராஜேஷ் கண்ணன், திருமுருகன் இருவரும் லட்சுமணன் வீட்டில் வைத்திருந்த சிலைகளைப் பார்த்துள்ளனர். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து சிலை கடத்தல் கும்பலை தொடர்பு கொண்டு சிலைகளை வெளிநாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டனர்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்த சிலைகள்

இந்நிலையில் சமீபத்தில் ராஜேஷ் கண்ணனுக்கு சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்திச் சென்று விற்பனை செய்பவர்களுடன் தொடர்பு கிடைத்தது. அதன்படி, ஆறு ஐம்பொன் சிலைகளையும் கடத்தல் கும்பலிடம் கொடுப்பதற்காக ராஜேஷ் கண்ணன், திருமுருகன் ஆகியோர் மயிலாடுதுறை கொற்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீட்டிலிருந்த சிலைகளை திருச்சி வழியாக சென்னைக்கு கொண்டு செல்வதற்கு காரில் கடத்திச் சென்றபோது சிக்கினர். இதைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைதுசெய்த பின்னர், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். பறிமுதல் செய்யபட்ட சிலைகள் குறித்து விசாரணை செய்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.