Darshan: குழந்தைக்கு தர்ஷனின் கைதி எண் பொறித்த ஆடை! - நடவடிக்கை எடுக்கக் கோரும் குழந்தைகள் நல ஆணையம்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான நடிகர் தர்ஷன், தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கடாவுக்குத் தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்த தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் தர்ஷனுக்கு 6106 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண் தற்போது வெளியில் கசிந்து இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

தர்ஷன்

தர்ஷனின் ரசிகர்கள் பலரும் இந்த எண்ணை டாட்டூவாக குத்திக்கொண்டும் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டிக் கொண்டும் இருக்கின்றனர்.

குறிப்பாக ஒரு பச்சிளம் குழந்தைக்கு இந்த எண் கொண்ட கைதி உடையை அணிவித்து தம்பதியினர் ஒருவர் போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

குழந்தைக்கு தர்ஷனின் கைதி எண் பொறித்த டீசர்ட்

மேலும் அதில் தர்ஷனை குறிப்பிடும் விதமாக தி பாஸ் என்ற வார்த்தையும் எழுதப்பட்டுள்ளது. ஒரு கைதியின் எண் கொண்ட உடையை அணிவிப்பது தவறான முன்னுதாரணம் என்றும் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டவர் மீது சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.