Neerathikaram: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தில் நீரதிகாரம் நூல் வெளியீடு!

அந்நிய ஆட்சியாளர்களுடைய அடக்குமுறைகளாலும், பஞ்சம், பட்டினி கொடுமைகளாலும் அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகளாலும் அந்நிய மண்ணுக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர் தமிழர்கள். அத்தகைய கொடுமைகளை அனுபவித்த தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுத முயன்ற ஒரு பிரிட்டிஷ் பொறியாளரின் கனவாக விரிந்தது முல்லைப் பெரியாறு அணை. இந்த வரலாற்று நிகழ்வை விவரித்து தனது படைப்பை நீரதிகாரம் என்று தலைப்பில் ஆனந்த விகடன் புத்தகத்தில் தொடராக எழுதினார் எழுத்தாளர் வெண்ணிலா.

நீரதிகாரம்

ஒரு வறண்ட நிலப்பரப்பின் வாழ்வியலையும், அந்த நிலப்பரப்பைச் சோலைவனமாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் பதிவு செய்த நீரதிகாரம் நூல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த ஜுலை 5ஆம் தேதி வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் 37வது ஆண்டு விழா நடைபெற்று இருக்கிறது.

இவ்விழாவில் வெண்ணிலா, கலியமூர்த்தி, அறிவுமதி, ஞானசம்பந்தம், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டுள்ளனர். சமத்துவம் தமிழரின் தனித்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்று இருக்கிறது.

நீரதிகாரம் நூல் வெளியீடு

இந்த விழாவில் நூல் வெளியீடுகளும் நிகழ்ந்தன. அந்தவகையில் தொழிலதிபர் ஆறுமுகம் நீரதிகாரம் நூலை வெளியிட ஞானசம்பந்தம், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.