ஆசிரியர் இடமாற்றம்; அதே பள்ளிக்கு மாறிய 133 மாணவர்கள்; நெகிழ்ச்சிக் கதை!
ஹைதராபாத், மஞ்சேரியல் மாவட்டத்தில் இருக்கும் பொனகல் கிராமத்தில் நீண்ட ஆண்டுகளாக அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் 53 வயதாக ஜெ.ஶ்ரீனிவாஸ்.
நீண்ட ஆண்டுகளாக இப்பள்ளியில் ஆசிரியராகப் பணிப்புரியும் இவர், மாணவர்களுடன் மிகுந்த அன்பாகப் பழகி, பாடம் எடுத்து வருபவர். அதனால் அப்பகுதியில் உள்ள அனைவரும் இவர் மீது நல்ல மரியாதை கொண்டுள்ளனர். மாணவர்களுக்கும் இவருக்கும் ஆசிரியர் - மாணவர்கள் என்ற உறவைத்தாண்டி பெற்றோரைப் போல மாணவர்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர் என்று நெகிழ்ச்சியுடன் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நீண்ட ஆண்டுகளாக பொனகல் கிராமப் பள்ளியில் பணிபுரிந்த இவர், கடந்த ஜூலை 1ம் தேதி அருகில் இருக்கும் வேறு கிராமப் பள்ளிக்கு பணியிட மாற்றாகியுள்ளார். இதனால் மிகவும் வருத்தமான மாணவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இதையடுத்து கடந்த ஜூலை 1ம் தேதி ஆசிரியர் ஜெ.ஶ்ரீனிவாஸ், அருகில் இருக்கும் அல்லபெள்ளிகூடா கிராமப் பள்ளிக்கு மாறியிருக்கிறார். அவர் பணியிடம் மாறிய இரண்டு நாள்களில் 1முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 250 மாணவர்களில் சுமார் 133 மாணவர்கள் அவர் பணியாற்றும் பள்ளியிலேயே சேர்ந்துள்ளார். அம்மாணவர்களின் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் ஆசிரியர் மீதான அன்பைப் புரிந்து கொண்டு 3 கிலோ மீட்டர் தள்ளி அமைந்துள்ள அப்பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிட்டுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
.jpg)
இது பற்றி நெகிழ்ச்சியாகப் பேசிய ஆசிரியர் ஶ்ரீனிவாஸ், "இது மாணவர்களும், பெற்றோர்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது. மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் என் கடமையை நான் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே என் மனதில் இருக்கிறது. மாணவர்களின் இந்த அன்பு என்னை திக்குமுக்காடச் செய்திருக்கிறது. அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நம்பிக்கையுடன் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

