அதி தேவதை வழிபாடு

ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கிறது என்றால் அந்த குழந்தைக்கு என்று ராசி, நட்சத்திரம், லக்னம் என்று இருக்கும். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் இருப்பார்கள். அதேபோல் லக்னத்திற்கும் தெய்வங்கள் இருப்பார்கள். இதே போல் தான் நட்சத்திரத்திற்கும் தெய்வங்கள் இருப்பார்கள்.

எந்த நட்சத்திரத்தில் அந்த குழந்தை பிறந்திருக்கிறதோ, அந்த நட்சத்திரத்திற்குரிய அதி தேவதையை வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுக்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்குமோ அதைவிட பல மடங்கு பலனை தரக்கூடியது ஆறாம் நட்சத்திரத்திற்குரிய அதிதேவதை. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த அதி தேவதையை எப்படி வழிபட்டால் அவர்கள் வாழ்க்கையில் இருக்க கூடிய கஷ்டங்கள் நீங்கும் என்றுதான் தெரிந்து கொள்ள போகிறோம்.

அதி தேவதை வழிபாடு

இந்த நட்சத்திரத்திற்குரிய அதிதேவதையை நாம் வழிபடும் பொழுது எப்படி நட்சத்திரம் எப்பொழுதும் ஒளி வீசி கொண்டு இருக்கிறதோ அதேபோல் நமக்கு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து வெளிவந்து வெற்றியுடன் வாழ முடியும். ஒருவர் தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார், எவ்வளவு மருத்துவ செலவு செய்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று நினைப்பவர்களும், தொடர்ச்சியாக எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த முயற்சிகள் வெற்றி அடையவில்லை என்று கவலைப்படுபவர்களும், காரிய வெற்று ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த நட்சத்திர அதிதேவதை வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

அஸ்வினி, மகம், மூலம் இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய அதிதேவதை துர்க்கை அம்மன். செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி குங்கும அர்ச்சனை செய்து உளுந்த வடை வைத்து நெய்வேத்தியம் செய்துவிட்டு அந்த உளுந்த வடையை பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும்.

பரணி, பூரம், பூராடம் இந்த நட்சத்திரக்காரர்கள் சிவபெருமான் ஆலயத்திற்கு திங்கட்கிழமையில் பிரதோஷ நேரத்தில் வில்வத்தை வைத்து தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கருப்பு கொண்டை கடலையில் சுண்டல் செய்து நெய்வேத்தியமாக படைத்து பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க வேண்டும்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த நட்சத்திரக்காரர்கள் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். சனிக்கிழமை அன்று காலை 6 மணியில் இருந்து 9 மணிக்குள் புளியோதரையை ஆஞ்சநேயருக்கு நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் இவர்கள் வழிபட வேண்டிய தேவதை பெருமாள். சனிக்கிழமை அல்லது அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாள் அன்று காலையில் ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் மிளகு பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் விநாயகர் பெருமான். வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி வரும் நாட்களில் தட்டைப்பயிரை விநாயகர் பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். வீட்டில் கருங்காலி விநாயகரை வைத்து வழிபடுவதன் மூலம் மிகப்பெரிய சிறப்பை அடைய முடியும்.

திருவாதிரை, சுவாதி, சதயம் இவர்கள் வழிபட வேண்டிய அதிதேவதை மகாலட்சுமி. வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணியிலிருந்து 7 மணிக்குள் சர்க்கரைப் பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் சிவன். பிரதோஷம், வியாழக்கிழமை போன்ற நாட்களில் சிவபெருமானுக்கு தேனால் அபிஷேகம் செய்து அந்த தேனை அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் வராகி அம்மன். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் மாதுளம் பழ முத்துக்களை வராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி இந்த நட்சத்திரக்காரர்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி தினத்தில் முருகப்பெருமான் ஆலயத்திற்கு காலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் சென்று பனங்கற்கண்டு கலந்த பாலை நெய்வேத்தியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மருத்துவ செலவை குறைக்க விளக்கு வழிபாடு

இவ்வாறு தொடர்ச்சியாக இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி வருபவர்களுக்கு நட்சத்திரம் போன்ற உயரிய வாழ்க்கை அமைவதோடு வெற்றிகளும் உண்டாகும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

The post அதி தேவதை வழிபாடு appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.