Farzi Web series-ஐ பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த கும்பல்... சிக்கியது எப்படி?!

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் அதிகப்படியான போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, அவற்றை புழக்கத்தில்விட்ட, கள்ளநோட்டு அச்சிடும் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கர்நாடக காவல்துறை கைதுசெய்திருக்கிறது. இந்த நிலையில், இந்த கள்ளநோட்டு கும்பல் ஃபர்ஸி (FARZI) என்ற இந்தி வெப் சீரிஸால் ஈர்க்கப்பட்டு, இச்செயலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளான அன்வர் யாதவாத், சதாம் யாதல்லி, ரவி ஹயகாடி, துண்டப்பா ஒனஷேனவி, விட்டல் ஹோசதொட்டல், மல்லப்பா குண்டலி ஆகியோர் 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடித்து புழக்கத்தில் விட்டது, தெரியவந்துள்ளது. இச்சூழலில் கோகாக் நகரில் உள்ள கடபகட்டி குடா என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது காருக்குள் 305 போலி 100 ரூபாய் நோட்டுகளும், 6,792,500 ரூபாய் நோட்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, காரை பறிமுதல் செய்த போலீஸார், அந்த கும்பலையும் கைதுசெய்தனர்.

பணம் - 500 ரூபாய் நோட்டு

இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பெலகாவி மாவட்டம், முதலகி தாலுகா அரபாவியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இரவு நேரத்தில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததை ஒப்புக்கொண்டதாகவும்,

கள்ளநோட்டு அச்சடித்த இக்கும்பல் இந்தியில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ஃபர்ஸி (FARZI) என்ற இணைய தொடரை பார்த்து கள்ள நோட்டு அச்சிடும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டதாகவும், அதன்பின் முதன்முறையாக ரூ.100 மற்றும் ரூ.500 நோட்டுகளை அச்சடித்ததாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரைம் இல் ராஜ் & டிகே உருவாக்கிய நகைச்சுவை மற்றும் க்ரைம் த்ரில்லர்  இணைய தொடரான  பார்ஸி(FARZI) ல், விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர், கே.கே.மேனன், ராஷி கண்ணா மற்றும் புவன் அரோரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபார்ஸி (Farzi)

இச்சூழலில் சுமார் 5,23,900 மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள், பிரிண்டர், ஸ்கிரீனிங் போர்டு, பெயின்ட், பிரிண்டிங் பேப்பர், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கோகாக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெலகாவி, எஸ்.பி பீமாசங்கர் குலேத் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.